முத்துப்பேட்டை கிழக்கு கடற்கரை சாலையோரம் கொட்டப்பட்ட குப்பை கிடங்கில் தீ-தொடரும் சம்பவத்தால் மக்கள் அவதி

முத்துப்பேட்டை : முத்துப்பேட்டை பேரூராட்சி பகுதியில் சேகரிக்கப்படும் குப்பைகளை ஆலங்காடு கிராம எல்லையில் உள்ள பேரூராட்சிக்கு சொந்தமான குப்பை கிடங்கில் பல வருடங்களாக கொட்டப்பட்டு வந்தது. தற்பொழுது மக்கள் தொகை பெருக்கம் அதிகரித்ததையடுத்து நகரில் குப்பைகள் அதிகளவில் சேருவதால் இந்த குப்பை கிடங்கு போதுமானதாக இல்லாமல் போனது.
இதனால் அப்பகுதியில் சுகாதார சீர்க்கேடு ஏற்ப்பட்டுள்ளது என அப்பகுதி மக்கள் குப்பை கொட்டுவற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அங்கு குப்பைகள் கொட்ட முடியாமல் போனதால் அன்றாடும் சேரும் குப்பைகளை கிழக்கு கடற்க்கரை சாலையோரம் பேரூராட்சி நிர்வாகம் கொட்டி வந்தது. இதனால் கோவிலூர் ரவுண்டானா முதல் சாலையோரம் குப்பைகள் நிரம்பி கிடக்கிறது.

இந்தநிலையில் அடிக்கடி யாரோ இந்த குப்பையில் வைத்து சென்ற தீயால் கொழுந்து விட்டு எரிந்து பயங்கர தீயாக மாறி அப்பகுதி முழுவதும் கடும் கரும்புகையாக காணப்படுவது வாடிக்கையாக உள்ளது. இதனால் கிழக்கு கடற்கரை சாலையில் செல்லும் வாகனங்கள் தெரியாதளவில் புகை சூழ்ந்து போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படும் அதனால் தீயணைப்பு வீரர்கள் தீயணைப்பு வாகனம் கொண்டும் பலமணிநேரம் தீயை போராடி அணைத்து வருகின்றனர்.

இதுபோன்று அடிக்கடி இந்த சம்பவம் இப்பகுதியில் தொடர்ச்சியாக நடந்து வருகிறது. சில வருடங்களுக்கு முன்பு இதுபோன்ற ஏற்பட்ட தீ விபத்தின்போது கரும்புகையால் சாலையில் எதிரே வந்த வாகனம் தெரியாமல் போனதால் ஒரு பைக்கில் குழந்தையுடன் வந்த தம்பதி விபத்தில் சிக்கி தனது குழந்தை பரிதாபமாக பலியானது. அதனால் இதற்கு ஒரு தீர்வு காணும் வகையில் அரசு உரிய நடவடிக்கை எடுத்து பேரூராட்சிக்கு என நிரந்த குப்பை கிடங்கு அமைக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

ஆனாலும் கடந்த 10ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த அதிமுக அரசு கண்டுக்கொள்ளவே இல்லை. இதற்கிடையில் இந்த பிரச்சனையை தீர்க்கும் வகையில் சென்ற வருடம் பேரூராட்சி செயல் அலுவலராக இருந்த தேவராஜன் என்பவர் தனிப்பட்ட முயற்சியில் மங்கலூர் தெற்குகாடுக்கு இடையே இருந்த அரசு புறம்போக்கு இடத்தில் குப்பை கிடங்கு அமைக்க முயற்சி மேற்கொண்டு அனைத்து பணிகளும் நிறைவு செய்யும் நிலையில் அவர் இடம் மாற்றம் பெற்று சென்று விட்டார் இதனால் அடுத்து வந்த அதிகாரிகள் அரசியல் தலையிட்டால் இதில் கவனம் செலுத்தாமல் அப்படியே கிடப்பில் போட்டு உள்ளனர்.

இதனால் நாளுக்குநாள் கிழக்கு கடற்கரை சாலையோரம் குப்பை மலைபோல் குவிந்து வருகிறது. எனவே இப்பகுதி போக்குவரத்து நலன் கருதி சாலையோரம் குவிந்து கிடக்கும் குப்பைகளை அகற்றி மறு சுழற்சிக்கு அனுப்புவதுடன் இப்பகுதியை சுத்தம் செய்ய வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துவந்தனர் இந்தநிலையில் கடந்த ந்தேதி இரவு யாரோ இந்த குப்பையில் வைத்து சென்ற தீயால் கொழுந்து விட்டு எரிய துவங்கி பயங்கர தீயாக மாறி அப்பகுதி முழுவதும் கடும் கரும்புகையாக காணப்பட்டது. இதனால் கிழக்கு கடற்கரை சாலையில் செல்லும் வாகனங்கள் தெரியாதளவில் புகை சூழ்ந்தது. மேலும் நெருப்பு தாக்கம் யாரும் செல்ல முடியாதளவில் மாறியது.

இந்தநிலையில் நேற்று மாலை மீண்டும் அதே குப்பைக்கு யாரோ மர்ம நபர்கள் தீவைத்து விட்டு சென்றனர் இதனால் தீ மளமளவென்று பரவி கொழுந்துவிட்டு எரிந்தது அதனால் அப்பகுதியில் சாலை முழுவதும் புகை சு+ழ்ந்து போக்குவரத்துக்கு இடையு+று ஏற்பட்டது தகவல் அறிந்து அங்கு வந்த முத்துப்பேட்டை தீயணைப்பு வீரர்கள் தீயணைப்பு வாகனம் கொண்டும் பலமணிநேரம் தீயை அணைக்க போராடினர். இதனால் முத்துப்பேட்டையில் நேற்று பரபரப்பு ஏற்பட்டது.

The post முத்துப்பேட்டை கிழக்கு கடற்கரை சாலையோரம் கொட்டப்பட்ட குப்பை கிடங்கில் தீ-தொடரும் சம்பவத்தால் மக்கள் அவதி appeared first on Dinakaran.

Related Stories: