முன்னாள் ஒன்றிய அமைச்சர் முரசொலி மாறன் கருத்துகளை இளையோருக்கு பயிற்றுவிப்போம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வலைத்தள பதிவு

சென்னை: ஒன்றிய முன்னாள் அமைச்சர் முரசொலி மாறனின் 90வது பிறந்த நாளையொட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். இதுகுறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட சமூக வலைத்தளப் பதிவு: நாளெல்லாம் நம்மை இயக்கிடும் நூற்றாண்டு நாயகர் கலைஞரின் மனச்சாட்சியென வாழ்ந்திட்ட முரசொலி மாறன் 90வது பிறந்தநாள் இன்று. மதுரை சிலைமானில் கலைஞரால் 1952ல் திறந்து வைக்கப்பட்ட கழக அலுவலகத்தில், மரியாதைக்குரிய முரசொலி மாறன் உருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினேன்.

கொள்கைக் கருவூலமான முரசொலி மாறன் எழுதிய மாநில சுயாட்சி நூல் அனைவரும் படித்திட வேண்டிய ஒன்று. முரசொலி மாறன் புகழ் போற்றுவோம். அவரது கருத்துகளை இளைய சமுதாயத்துக்குப் பயிற்றுவிப்போம்.இவ்வாறு பதிவிட் டுள்ளார்.

The post முன்னாள் ஒன்றிய அமைச்சர் முரசொலி மாறன் கருத்துகளை இளையோருக்கு பயிற்றுவிப்போம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வலைத்தள பதிவு appeared first on Dinakaran.

Related Stories: