மும்பையில் ஆகஸ்ட் 30ம் தேதி ஆலோசனை.. I.N.D.I.A கூட்டணி உருவானதை பிரதமர் மோடியால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை: காங்கிரஸ் தாக்கு!

டெல்லி : I.N.D.I.A கூட்டணியின் அடுத்த கூட்டம் மும்பையில் ஆகஸ்ட் 30ம் தேதி தொடங்கும் என காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார். டெல்லியில் திமுக ஐடி விங் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த மாநாட்டில் பேசிய ஜெய்ராம் ரமேஷ், முதன்முறையாக நாடு முழுவதும் பெரிய அளவில் எதிர்க்கட்சிகள் ஒன்று திரண்டு இருப்பதாக கூறினார். பாட்னா, பெங்களூருவைத் தொடர்ந்து மும்பையில் ஆகஸ்ட் 30ம் தேதி முதல் செப்டம்பர் 1ம் தேதி வரை I.N.D.I.A கூட்டணியின் அடுத்த கூட்டம் நடைபெற இருப்பதாக அவர் தெரிவித்தார். மாநில அளவில் கட்சிகளுக்குள் பேதங்கள் இருந்தாலும் அதையெல்லாம் மறந்து தேசிய பிரச்சனைக்காக கட்சிகள் ஓரணியில் திரண்டு இருப்பதாக அவர் பெருமிதம் தெரிவித்தார்.

I.N.D.I.A கூட்டணி உருவானதை பொறுத்த கொள்ள முடியாமல் பிரதமர் மோடி தேசிய ஜனநாயக கூட்டணிக்கு உயிர் கொடுத்து இருப்பதாக ஜெய்ராம் ரமேஷ் குறிப்பிட்டார். ஆக்கபூர்வமாக எதையும் சாதிக்காமல் வெறுமனை போக்கு காட்டி வருவதையும் பிரிவினையை தூண்டும் அரசியலையும் மக்கள் அறவே வெறுப்பதாக தெரிவித்த அவர், மக்கள் மாற்றத்தை எதிர்நோக்கி இருப்பதாக கூறினார். கடந்த 9 ஆண்டுகளில் இந்திய ஜனநாயகம் பலவீனப்படுத்தப்பட்டு இருப்பதை சுட்டிக் காட்டிய அவர், ஜனநாயகத்தை காப்பது மட்டுமல்லாது, வலுப்படுத்த வேண்டிய அவசியமும் ஏற்பட்டுள்ளது என்றார்.

The post மும்பையில் ஆகஸ்ட் 30ம் தேதி ஆலோசனை.. I.N.D.I.A கூட்டணி உருவானதை பிரதமர் மோடியால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை: காங்கிரஸ் தாக்கு! appeared first on Dinakaran.

Related Stories: