×

142 எம்பிக்கள் பணியிடை நீக்கம்: பாஜ அரசை கண்டித்து காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்

திருவள்ளூர்: இந்திய கூட்டணியின் 142 மக்களவை உறுப்பினர்களை இடைநீக்கம் செய்த பாஜக அரசை கண்டித்து திருவள்ளூரில் வடக்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் துரை சந்திரசேகர் எம்எல்ஏ தலைமை தாங்கினார். மாநில நிர்வாகிகள் ஏகாட்டூர் ஆனந்தன், சம்பத், அஸ்வின்குமார், வெங்கடேசன், சசிகுமார், கோவிந்தராஜ், மாவட்ட நிர்வாகிகள் மணவாளன், தளபதி மூர்த்தி, கலைச்செல்வன், பழனி, பிரதாப் ராஜ்குமார், சதீஷ், வினோத், பாலாஜி, ராஜேஷ், சுரேந்தர், முகுந்தன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர தலைவர் ஜோசிபிரேம் ஆனந்த் அனைவரையும் வரவேற்றார்.

இந்திய கூட்டணியின் 142 மக்களவை உறுப்பினர்களை இடைநீக்கம் செய்ததையும், மக்களவையை பாதுகாப்பற்ற நிலையில் ஜனநாயகத்தை குழிதோண்டி புதைத்த பாஜ அரசை கண்டித்தும், தேச விரோதிகளை மக்களவைக்குள் நுழைய அனுமதிக்க கடிதம் அளித்த கர்நாடகத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினரை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி கண்டன கோஷங்களை ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் நகர, பேரூராட்சி, வட்டார தலைவர்கள் ஜெயசங்கர், பார்த்திபன், பிரேம்குமார், ஜமாலுதீன், அரவிந்த், சீனிவாசன், சிவக்குமார், பொன்னுரங்கம், காமேஷ், செந்தில்குமார், மூர்த்தி, சிவன், கே.வேணுகோபால், சசிகுமார், பெரியசாமி, பாபு, கோஹ்லி, மணிகண்டன், புருஷோத்தமன், ஜெயசீலன், குணசேகர், வினோத் உள்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

The post 142 எம்பிக்கள் பணியிடை நீக்கம்: பாஜ அரசை கண்டித்து காங்கிரஸ் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Tags : Congress ,BJP government ,Tiruvallur ,North District Congress ,Lok Sabha ,Indian Alliance ,Dinakaran ,
× RELATED பாஜ அரசில் இளைஞர்களுக்கு ஏமாற்றமே...