ம.பி. தேர்தல் குழு ஒருங்கிணைப்பாளராக ஒன்றிய அமைச்சர் தோமர் நியமனம்

புதுடெல்லி: மத்தியபிரதேச தேர்தல் நிர்வாகக்குழு ஒருங்கிணைப்பாளராக ஒன்றிய அமைச்சர் நரேந்திர சிங் தோமரை பாஜ நியமித்துள்ளது. மத்தியபிரதேசத்தில் முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் தலைமையிலான பாஜ ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு இறுதிக்குள் மத்தியபிரதேச சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இங்கு ஆட்சியை தக்க வைத்து கொள்ள பாஜ தற்போதே தயாராகி வருகிறது. அதன்படி மத்தியபிரதேச சட்டப்பேரவை தேர்தல் மேலாண்மைக் குழுவின் ஒருங்கிணைப்பாளராக ஒன்றிய வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் நியமிக்கப்பட்டுள்ளார்.

The post ம.பி. தேர்தல் குழு ஒருங்கிணைப்பாளராக ஒன்றிய அமைச்சர் தோமர் நியமனம் appeared first on Dinakaran.

Related Stories: