The post ‘மோடி அரசே வெளியேறு’ முழக்கமிட்டு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் மறியல் போராட்டம்..!! appeared first on Dinakaran.
‘மோடி அரசே வெளியேறு’ முழக்கமிட்டு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் மறியல் போராட்டம்..!!

கோவை: கோவையில் ஒன்றிய அரசை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு உள்ளிட்டவற்றின் விலை உயர்ந்ததற்கு ஒன்றிய அரசே காரணம் என்று குற்றச்சாட்டு வைத்துள்ளனர். மோடி ஆட்சியில் சிறு,குறு தொழில்கள் அழிந்து வருவதாகவும் கார்பரேட் முதலாளிகள் கொள்ளையடிப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ‘மோடி அரசே வெளியேறு’ என்று முழக்கமிட்டு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் மறியல் போராட்டம் நடத்தி வருகின்றனர்.