திருவள்ளூர்: திருவள்ளூர் நாடாளுமன்ற தனி தொகுதியில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி சார்பில் சசிகாந்த் செந்தில் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து தொடர்ந்து கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். அதன்படி நேற்று மீஞ்சூர் ஒன்றியத்திற்குட்பட்ட கிராமங்களில் திமுக மாவட்டச் செயலாளர் டி.ஜெ.கோவிந்தராஜன் எம்எல்ஏ, காங்கிரஸ் மாவட்டத் தலைவர் துரைசந்திரசேகர் எம்எல்ஏ ஆகியோருடன் வேட்பாளர் சசிகாந்த் செந்தில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
இந்த வாக்குசேகரிப்பின் போது, காங்கிரஸ் முன்னாள் மாவட்டத் தலைவர் ஏ.ஜி.சிதம்பரம், மாநிலச் செயலாளர் சம்பத், மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் கே.வி.ஜி.உமாமகேஸ்வரி, திமுக ஒன்றிய செயலாளர்கள் ப.சுகுமாறன், கா.சு.ஜெகதீசன், மாவட்ட நிர்வாகிகள் மு.பகலவன், எம்.எல்.ரவி, எஸ்.ரமேஷ், கதிரவன், தொகுதி மேற்பார்வையாளர் அழகிரி சதாசிவம், பொதுக்குழு உறுப்பினர் சுப்பிரமணி, ஒன்றியக்குழு தலைவர் அத்திப்பட்டு ஜி.ரவி, ஒன்றியக்குழு துணைத் தலைவர் தமிழ்ச்செல்வி பூமிநாதன்,
காங்கிரஸ் வட்டாரத் தலைவர் ஜெயசீலன், புருஷோத்தமன், வினோத், செந்தில்குமார், கோசல்ராமன், தேவகிருபை தன்சிங், திமுக நிர்வாகிகள் பூமிநாதன், ஆசானபூதூர் சம்பத் கருணாகரன், முரளி, வெற்றி, அன்பு, தமின்சா, ரமேஷ், முகமது அலவி, ஜெயபால், தேசராணி தேசப்பன், அசௌகன், கன்னிமுத்து, தினேஷ், தமிழரசன், யுவராஜ் உட்பட கூட்டணி கட்சி நிர்வாகிகள் கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் வீதிவீதியாகச் சென்று கை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தனர்.
அப்போது வேட்பாளர் சசிகாந்த் செந்தில் பேசுகையில், காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் தெரிவித்திருப்பது போல் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள பெண்களுக்கு மாதம் ரூ.8 ஆயிரம் வழங்கவும், படித்த வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கவும், மீனவர்களுக்கு அனைத்து திட்டங்களை நிறைவேற்றவும், மீனவர்களின் வாழ்வாதாரத்திற்காக மீன் பிடிப்பதற்கு படகுகள், வலைகள், என்ஜின்கள் மானிய விலையில் கிடைக்கவும் முயற்சி செய்வேன். பழவேற்காடு பகுதியில் சிறிய துறைமுகம் அமைத்து மீன்பிடித்தலமாக மாற்றவும், மீனவ குடும்ப இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு பெற்றுத் தரவும் நடவடிக்கை எடுப்பேன் என வாக்குறுதிகளை கூறி வாக்கு சேகரித்தார்.
The post எம்எல்ஏக்கள் டி.ஜெ.கோவிந்தராஜன், துரைசந்திரசேகர் தீவிர வாக்கு சேகரிப்பு பழவேற்காடு பகுதியில் சிறிய துறைமுகம் அமைத்து மீன்பிடித்தலமாக மாற்றுவேன் appeared first on Dinakaran.