அமைச்சர் கயல்விழி தலைமையில் வன்கொடுமை வழக்குகள் தொடர்பான ஆய்வு கூட்டம்

சென்னை: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் கயல்விழி தலைமையில் வன்கொடுமை வழக்குகள் தொடர்பான ஆய்வு கூட்டம் தலைமை செயலகத்தில் நேற்று நடைபெற்றது. ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் தலைமையில் காவல்துறை தலைவர், சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் மற்றும் ஆதிதிராவிடர் நல இயக்குநர் ஆகியோருடன் நேற்று வன்கொடுமை வழக்குகள் மற்றும் தீருதவிகள் தொடர்பான பொருண்மை குறித்து ஆய்வு கூட்டம் தலைமை செயலகத்தில் நடந்தது. கூட்டத்தில், வன்கொடுமைக்கு ஆளானவர்களுக்கு அளிக்கப்பட்ட தீருதவி, மறுவாழ்வு மற்றும் அவை பற்றிய விவரங்கள், இந்த சட்டத்தின்கீழ் வழக்குகள் தொடுத்தல், பழங்குடியினர் சாதிச்சான்றிதழ் மெய்தன்மை குறித்து நிலுவையில் உள்ள வழக்குகளை விரைவில் முடித்தல் ஆகியவை குறித்து கூட்டத்தில் ஆய்வு செய்யப்பட்டது. கூட்டத்தில், துறை செயலாளர் லட்சுமி பிரியா, ஆதிதிராவிடர் நலத்துறை இயக்குநர் ஆனந்த், சமூக நீதி மற்றும் மனித உரிமைகள், காவல்துறை தலைவர் எஸ்.பிரபாகரன் அதிகாரிகள் பங்கேற்றனர்.

The post அமைச்சர் கயல்விழி தலைமையில் வன்கொடுமை வழக்குகள் தொடர்பான ஆய்வு கூட்டம் appeared first on Dinakaran.

Related Stories: