சேலம்: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 67 கனஅடியில் இருந்து 148 கனஅடியாக சற்று அதிகரித்துள்ளது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் 62.24 அடியாக குறைந்துள்ளது. நீர் இருப்பு 26.385 டி.எம்.சி.யாக உள்ளது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1,000 கனஅடி நீர் திறக்கப்படுகிறது.