The post மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு விடுமுறை கால சிறப்பு ரயில் இயக்கம் துவக்கம் appeared first on Dinakaran.
மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு விடுமுறை கால சிறப்பு ரயில் இயக்கம் துவக்கம்

மேட்டுப்பாளையம்: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு செல்லும் உதகை மலை ரயிலை கூடுதலாக இயக்க சுற்றுலா பயணிகள்கோரிக்கை விடுத்து வந்தனர். இதனையடுத்து, நேற்று முதல் வரும் 30ம் தேதி மற்றும் அடுத்த மாதம் 21, 23ஆம் தேதிகளில் விடுமுறை தின சிறப்பு மலை ரயிலை இயக்க ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டது. வரும் 18ம் தேதி விநாயகர் சதுர்த்தி, அக்டோபர் 2ம் தேதி காந்தி ஜெயந்தி, 23ம் தேதி ஆயுத பூஜை விடுமுறைகளை முன்னிட்டு சுற்றுலா பயணிகளின் வசதிக்காக இந்த விடுமுறை தின சிறப்பு மலை ரயில் இயக்கப்பட உள்ளது. இதற்கிடையே, நேற்று காலை 9.10 மணிக்கு மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்தில் இருந்து 180 பயணிகளுடன் இந்த விடுமுறை தின சிறப்பு மலை ரயில் புறப்பட்டு சென்றது. சுற்றுலா பயணிகள் சிறப்பு ரயில் முன் ஆர்வத்துடன் செல்பி எடுத்தும், குழு புகைப்படம் எடுத்தும் மகிழ்ந்தனர். விநாயகர் சதுர்த்தி, காந்தி ஜெயந்தி மற்றும் ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை விடுமுறை தினங்களை கொண்டாடும் வகையில் சிறப்பு மலை ரயில் இயக்கப்பட்டதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.