வியாபாரிகள் ஆலோசனை கூட்டம்

உத்திரமேரூர்: உத்திரமேரூர் அனைத்து வியாபாரிகள் முன்னேற்ற சங்கம் சார்பில், அதன் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில், சங்க தலைவர் செல்வகுமார் தலைமை தாங்கினார். செயலாளர் சேகர் முன்னிலை வகித்தார். கூட்டத்தில், வரும் மே 5-ம்தேதி வணிகர் தினத்தினை முன்னிட்டு, வியாபாரிகள் அனைவரும் ஒன்றிணைந்து, வணிகர் தினத்தை விமரிசையாக கொண்டாடுவது, வணிகர்கள் தங்களது கடைகளில் உள்ள எடை கற்கள் மற்றும் தராசில் முத்திரை தரச்சான்று பெறுவது உள்ளிட்டவைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. மேலும், இந்த ஆண்டில் வணிகர்கள் குடும்ப ஆண்டு விழா கொண்டாடுவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் வியாபாரிகள், முன்னேற்ற சங்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

The post வியாபாரிகள் ஆலோசனை கூட்டம் appeared first on Dinakaran.

Related Stories: