×

மாதவிடாய் விடுப்பு பெண்களுக்கு பாதகமாகலாம்: உச்ச நீதிமன்றம்

புதுடெல்லி: உச்ச நீதிமன்றத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்னதாக ஒரு பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டு இருந்தது. அதில், ‘‘வேலை செய்யும் பெண்களுக்கு பணியிடங்களில் மாதவிடாய் காலங்களில் விடுப்பு வழங்கும் வகையில் தெளிவான கொள்கைகளை உருவாக்க ஒன்றிய அரசு, மாநில அரசு, மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதையடுத்து மேற்கண்ட மனுவானது உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் அமர்வில் விசாரணைக்கு வந்தபோது பிறப்பித்த உத்தரவில், ‘‘அதிக விடுப்பு பெண்களுக்கு வழங்குவதை கட்டாயமாக்குவது என்பது பெண்கள் பணியிடங்களில் இருந்து ஒதுக்கி வைக்க வழி வகுக்கும். எனவே அதை நாங்கள் விரும்பவில்லை.

பெண்களை பாதுகாக்க எடுக்கும் முயற்சிகள் அவர்களுக்கு சில நேரங்களில் பாதகமாக அமையவும் வாய்ப்புள்ளது. குறிப்பாக இந்த விவகாரம் என்பது அரசின் கொள்கை சார்ந்த முடிவு என்பதால் நீதிமன்றங்கள் இதில் தலையிட முடியாது. அதே நேரத்தில் சம்பந்தப்பட்ட மனுதாரர் ஒன்றிய பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சகத்தை நாடி இதுதொடர்பான கோரிக்கைகளை முன்வைக்கலாம் என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார். இதில் முன்னதாக இதுபோன்ற மனுக்களை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்திருந்தது குறிப்பிடத்தக்கதாகும்.

The post மாதவிடாய் விடுப்பு பெண்களுக்கு பாதகமாகலாம்: உச்ச நீதிமன்றம் appeared first on Dinakaran.

Tags : Supreme Court ,NEW DELHI ,Union Government ,State Government ,
× RELATED கனிம வளங்கள் தொடர்பான உரிமைகளுக்கு...