அந்த வகையில், தமிழ்நாட்டின் மாநில விலங்கான வரையாடுகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் முதன்முறையாக வரையாடு கணக்கெடுப்பு பணி வில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பகத்தில் இன்று காலை துவங்கியது. இப்பணியில் வனத்துறையினர் சுமார் 100 ேபர் ஈடுபட்டுள்ளனர். இன்று துவங்கிய இப்பணி மே 1ம் தேதி மாலை வரை நடைபெறுகிறது.
ஸ்ரீவில்லிபுத்தூர் மேற்கு தொடர்ச்சி மலையை பொறுத்தவரை மலை உச்சியிலேயே வரையாடுகள் அதிகமாக வசித்து வருகின்றன. சுமார் 30க்கும் மேற்பட்ட இடங்களை தேர்வு செய்து வனத்துறையினர் கணக்கெடுப்பில் ஈடுபட்டுள்ளனர். ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பக துணை இயக்குநர் தேவராஜ் உத்தரவின் பேரில் ரேஞ்சர் கார்த்திக் தலைமையில் வனத்துறையினர் கணக்கெடுப்பில் ஈடுபட்டுள்ளனர்.
The post ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பகத்தில் வரையாடுகள் கணக்கெடுப்பு பணி இன்று துவங்கியது appeared first on Dinakaran.