மார்கழி உற்சவத்தையொட்டி திருப்பரங்குன்றம் கோயில் நடை திறப்பில் மாற்றம்

திருப்பரங்குன்றம்: மார்கழி உற்சவத்தையொட்டி திருப்பரங்குன்றம் கோயிலில் நடை திறப்பில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மதுரை திருப்பரங்குன்றத்தில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோயில் முருகப்பெருமானின் முதல்படை வீடாக அழைக்கப்படுகிறது. இங்கு ஆண்டுதோறும் மார்கழி மாதம் உற்சவ விழா சிறப்பாக நடைபெறும். இந்த ஆண்டுக்கான மார்கழி உற்சவ விழா டிச.17ம் தேதி துவங்கி ஜன.1ம் தேதி நிறைவடைகிறது. இதில், டிச.18ம் தேதி மாணிக்கவாசகர் காப்பு கட்டுதல் நடைபெறும். டிச.28ல் எண்ணெய் காப்பு நிகழ்ச்சி துவங்கி ஜன.1ம் தேதி வரை நடைபெறும்.

மார்கழி மாத பிறப்பையொட்டி டிச.17 முதல் ஜன.14ம் தேதி வரை அதிகாலை 4.30 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு நண்பகல் 12 மணிக்கு நடை சாத்தப்படும். மீண்டும் மாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு இரவு 8.30 மணிக்கு நடை சாத்தப்படுகிறது. மார்தழி மாதத்தை முன்னிட்டு பக்தர்கள் அதிகளவில் வர வாய்ப்புள்ளதால் பக்தர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளதாக கோயில் துணை ஆணையர் சுரேஷ் தெரிவித்துள்ளார்.

The post மார்கழி உற்சவத்தையொட்டி திருப்பரங்குன்றம் கோயில் நடை திறப்பில் மாற்றம் appeared first on Dinakaran.

Related Stories: