டெல்லி: மணிப்பூர் வன்முறை வழக்கு தொடர்பாக அம்மாநில டிஜிபி ராஜிவ் சிங் உச்சநீதிமன்றத்தில் நேரில் ஆஜரானார். மணிப்பூர் மாநிலத்தில் 3 மாதங்களாக இன மோதல்கள் தொடருகின்றன. மைத்தேயி-குக்கி இனக்குழுக்களிடையேயான இம்மோதல் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. மணிப்பூர் இனமோதல்களில் 200க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். 50,000க்கும் மேற்பட்டோர் இடம்பெயர்ந்து அகதிகளாகி உள்ளனர். மணிப்பூர் நிலவரம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்குகளை தலைமை நீதிபதி அமர்வு விசாரித்து வருகிறது.
கடந்த முறை வழக்கு விசாரணையின்போது மாநில அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்து அதிருப்தியை வெளியிட்டது. மணிப்பூரில் மாநில அரசு செயல்படுகிறதா? மணிப்பூர் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துவிட்டது. மணிப்பூரில் காவல்துறை என்னதான் செய்கிறது? என சரமாரி கேள்விகளையும் கண்டனங்களையும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் முன்வைத்தனர். மேலும் மணிப்பூரில் சட்டம்- ஒழுங்கு செயலிழந்துவிட்டதாக உச்சநீதிமன்றம் கடுமையான அதிருப்தியை வெளிப்படுத்தியிருந்தது.
மணிப்பூர் கலவரத்தை முடிவுக்கு கொண்டுவர என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது?, பாலியல் வன்முறைக்கு பெண்களை விட்டுச் சென்ற போலீசாரை ஏன் இன்னும் கைது செய்யவில்லை? உட்பட 6 கேள்விகளுக்கு டிஜிபி பதிலளிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், மணிப்பூர் வன்முறை வழக்கு தொடர்பாக அம்மாநில டிஜிபி ராஜிவ் சிங் உச்சநீதிமன்றத்தில் நேரில் ஆஜரானார். மணிப்பூர் வன்முறை தொடர்பாக சரமாரியாக கேள்வி எழுப்பிய நிலையில் டிஜிபி ராஜிவ் சிங் நேரில் ஆஜராகியுள்ளார்.
The post மணிப்பூர் வன்முறை வழக்கு தொடர்பாக அம்மாநில டிஜிபி ராஜிவ் சிங் உச்சநீதிமன்றத்தில் நேரில் ஆஜர்..!! appeared first on Dinakaran.