மணிப்பூரில் பெண்கள் மீதான கொடூர வன்முறையை கண்டு என் இதயம் உடைந்துவிட்டது: முதல்வர் மு.க.ஸ்டாலின் வேதனை

இம்ப்ஹல்: மணிப்பூரில் பெண்கள் மீதான கொடூர வன்முறையை கண்டு என் இதயம் உடைந்துவிட்டது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேதனை தெரிவித்துள்ளார். மணிப்பூரில் மெய்டீஸ் சமூகத்தினருக்கு பழங்குடியினர் அந்தஸ்து வழங்க எதிர்ப்பு தெரிவித்து கடந்த மே மாதம் பயங்கர கலவரம் ஏற்பட்டது. அதை தொடர்ந்து 2 மாதங்களுக்கும் மேலாக வன்முறைகள் நடந்தன. வன்முறையில் ஈடுபட்ட குக்கி தீவிரவாதிகள் பலரை பாதுகாப்பு படை சுட்டு கொன்றது. அங்கு நடந்த வன்முறையில் 200 பேர் உயிரிழந்துள்ளனர்.

அமைதியை நிலைநாட்டுவதற்கு போலீசாருடன் இணைந்து ராணுவமும் பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் மணிப்பூரில் குக்கி பழங்குடியின பெண்கள் இருவரை நிர்வாணமாக இழுத்துச் சென்று ஒரு கும்பல் பாலியல் வன்கொடுமை செய்தது. வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து குற்றம் இழைத்தவர்களை தீவிரமாக தேடி வருவதாக அம்மாநில போலீசார் விளக்கம் அளித்துள்ளது. மேலும் கடந்த மே மாதம் 4ம் தேதி இச்சம்பவம் நடந்துள்ளதாக போலீசார் கூறியுள்ளனர்; கடத்தல், கூட்டு பாலியல் வன்கொடுமை, கொலை ஆகிய பிரிவுகளில் வழக்கு பதிவாகியுள்ளது.

நாட்டையே உலுக்கியுள்ள இச்சம்பவம் நடந்து 77 நாட்கள் ஆன பிறகே வெளி உலகிற்கு தெரியவந்துள்ளது. இந்நிலையில் மணிப்பூரில் பெண்கள் மீதான கொடூர வன்முறையை கண்டு என் இதயம் உடைந்துவிட்டது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேதனை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில்; மணிப்பூரில் பெண்கள் மீதான கொடூர வன்முறையை கண்டு என் இதயம் உடைந்துவிட்டது; வெறுப்பும், வன்மமும் மனித குலத்தின் ஆன்மாவை வேரோடு பிடுங்குகிறது; வன்முறைக்கு எதிராக ஒன்றிணைந்து மரியாதைமிக்க சமுதாயத்தை உருவாக்க உழைக்க வேண்டும்” இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

The post மணிப்பூரில் பெண்கள் மீதான கொடூர வன்முறையை கண்டு என் இதயம் உடைந்துவிட்டது: முதல்வர் மு.க.ஸ்டாலின் வேதனை appeared first on Dinakaran.

Related Stories: