மணிப்பூரில் பெண்கள் மீதான கொடூர வன்முறை.. தாலிபான் ஆட்சி செய்யும் பகுதிகளில் கூட நடந்ததாக கேள்விப்படவில்லை : பிரதமர் மோடிக்கு கடிதம்!!

இம்பால் : மணிப்பூரில் மேலும் 10 சம்பவங்களில் பெண்கள் துன்புறுத்தப்பட்டதாகவும் பலர் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாகவும் மனித உரிமைகளுக்கான குக்கி மகளிர் அமைப்பு பிரதமர் மோடி கடிதம் எழுதியுள்ளது. அதில் குக்கி சமூகத்தைச் சேர்ந்த 2 பெண்கள் நிர்வாணமாக இழுத்து வரப்பட்டு மெய்தி சமூகத்தைச் சேர்ந்த கும்பலால் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இது போன்ற ஒரு கொடூர மனித உரிமை அத்துமீறல் , மனித தன்மை அற்ற செயல் தாலிபான் ஆட்சி செய்யும் பகுதிகளில் நடந்ததாக கூட கேள்விப்பட்டதில்லை என்று குக்கி மகளிர் அமைப்பு தெரிவித்துள்ளனர்.

பெண்கள் மீதான வன்முறை குறித்து பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையை மறைத்து நோங்போக் செக்மாய் காவல் நிலைய போலீசார் உடந்தையாக இருந்தனர் என்று குறிப்பிட்டுள்ள குக்கி மகளிர் அமைப்பினர், 2020ம் ஆண்டு அந்த காவல் நிலையத்திற்கு இந்தியாவின் சிறந்த காவல் நிலையம் என்று விருது வழங்கியதில் ஆச்சரியம் எதுவும் இல்லை என்று விமர்சித்துள்ளன. மணிப்பூரில் தற்போது நடைபெற்று வரும் வன்முறையில் குக்கி சமூகத்தைச் சேர்ந்த பெண்களும் குழந்தைகளும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக கடிதத்தில் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும் மணிப்பூரில் மேலும் 10 சம்பவங்களில் பெண்கள் துன்புறுத்தப்பட்டதாகவும் பலர் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். எனவே மணிப்பூர் விவகாரத்தில் உடனடியாக தலையிட்டு, உரிய தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமர் மோடியை மனித உரிமைகளுக்கான குக்கி மகளிர் அமைப்பினர் வலியுறுத்தி உள்ளனர்.

The post மணிப்பூரில் பெண்கள் மீதான கொடூர வன்முறை.. தாலிபான் ஆட்சி செய்யும் பகுதிகளில் கூட நடந்ததாக கேள்விப்படவில்லை : பிரதமர் மோடிக்கு கடிதம்!! appeared first on Dinakaran.

Related Stories: