மணிப்பூர் கொடூரம் குறித்து விவாதிக்க வலியுறுத்தி நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் முழக்கம்: மக்களவை நாள் முழுவதும் ஒத்திவைப்பு

டெல்லி: மணிப்பூர் கொடூரத்தை கண்டித்து நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் முழக்கங்களை எழுப்பியதால் இரு அவைகளும் முடங்கின. மணிப்பூர் விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் கடும் அமளி செய்ததையடுத்து, மாநிலங்களவை பிற்பகல் 2.30 மணி வரை ஒத்திவைப்புமக்களவை நாள் முழுவதும் ஒத்திவைக்கபட்டது

மணிப்பூர் மாநிலத்தில் மெய்தி இன மக்களுக்கும் பழங்குடி இன மக்களுக்கும் இடையே நடைபெற்று வரும் மோதல் 2 மாதத்துக்கு மேல் நீடித்து வருகிறது. இந்தநிலையில் 2 பெண்களை நிர்வாணப்படுத்தி ஒரு தரப்பினர் இழுத்து சென்ற சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இந்த பிரச்சினை, நேற்று நாடாளுமன்றத்திலும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. .

மணிப்பூர் கொடூரம் குறித்து பிரதமர் மோடி நாடாளுமன்றத்தில் விளக்கம் தர வேண்டும் என மக்கள் விரும்புவதாக கூறி எதிர்கட்சிகள் முழக்கங்களை எழுப்பினர். மணிப்பூர் எரிகிறது, பிரதமர் விளக்கமளிக்க வேண்டும் என பதாகைகளை ஏந்தி முழக்கமிட்டதால் மக்களவை நாள் முழுவதும் ஒத்திவைக்கபட்டது.

மணிப்பூர் கொடூரத்தை கண்டித்து நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் முழக்கங்களை எழுப்பியதால் இரு அவைகளும் முடங்கின. மணிப்பூர் விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் கடும் அமளி செய்ததையடுத்து, மாநிலங்களவை பிற்பகல் 2.30 மணி வரை ஒத்திவைப்புமக்களவை நாள் முழுவதும் ஒத்திவைக்கபட்டது.

The post மணிப்பூர் கொடூரம் குறித்து விவாதிக்க வலியுறுத்தி நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் முழக்கம்: மக்களவை நாள் முழுவதும் ஒத்திவைப்பு appeared first on Dinakaran.

Related Stories: