மலேசியாவை தொடர்ந்து எந்தெந்த நாடுகளுடன் ரூபாய் வழி வர்த்தகம்: மக்களவையில் தயாநிதி மாறன் எம்.பி கேள்வி

புதுடெல்லி: மலேசியாவை தொடர்ந்து வேறு எந்த நாடுகளுடன் ரூபாய் வழி வர்த்தகம் விரிவுபடுத்தப்படும் என்று மக்களவையில் தயாநிதி மாறன் எம்.பி கேள்வி எழுப்பினார். மக்களவையில் மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் எழுப்பிய கேள்வி வருமாறு: இந்தியா – மலேசியா இடையேயான வர்த்தகத்தில், பணப் பரிமாற்றத்திற்கான செலவுகளை குறைக்கும் வகையில் “ரூபாய் வழி வர்த்தகம்” என ஒன்றிய அரசு அறிவித்ததன் மூலம் வர்த்தகங்கள் பயனடைந்துள்ளதா? அவ்வாறெனில், பணப் பரிமாற்றத்திற்காக ஏற்படக்கூடிய செலவு விகிதத்தில் நிலையற்ற தன்மை ஏற்படாமல் இருப்பதை உறுதி செய்ய மேற்கொண்ட நடவடிக்கைகள் என்ன?

மலேசியாவை தொடர்ந்து மற்ற நாடுகளுடனான வர்த்தகத்திலும் ரூபாயின் பயன்பாட்டை விரிவுபடுத்துவதற்காக ஒன்றிய அரசிடம் ஏதேனும் திட்டங்கள் உள்ளதா என்றும் அவ்வாறெனில் அதற்காக பரிசீலிக்கப்படும் நாடுகள் எவை? ரூபாய் வழி வர்த்தகத்தினால், இதில் தொடர்புடைய நிர்வாகச் சுமையை நிர்வகிப்பதில், சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு (SMEs) குறிப்பாக குறைந்த வளங்ளை கொண்டவர்களுக்கு உதவிடும் வகையில் ஒன்றிய அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் என்ன எனவும் கேள்வி எழுப்பினார்.

The post மலேசியாவை தொடர்ந்து எந்தெந்த நாடுகளுடன் ரூபாய் வழி வர்த்தகம்: மக்களவையில் தயாநிதி மாறன் எம்.பி கேள்வி appeared first on Dinakaran.

Related Stories: