மைதா ரவை பணியாரம்

தேவையானவை

மைதா மாவு – 200 கிராம்
ரவா – 25 கிராம்
சீனி – 100 கிராம்
தேங்காய் துருவல் – கால் கப்
வாழைப்பழம் – ஒன்று
முந்திரி – 8
உப்பு – ஒரு சிட்டிகை

செய்முறை :

முதலில் மைதா மாவை சலித்து சுத்தம் செய்து எடுத்துக் கொள்ளவும். . பின் ஒரு பாத்திரத்தில் சலித்த மைதாமாவு, ரவா இரண்டையும் சேர்த்து எடுத்து கலந்துக் கொள்ளவும். இப்பொழுது மிக்ஸியில் முந்திரி, தேங்காய் துருவல், ஏலக்காய் ஆகியவற்றை போட்டு ஒரு முறை அரைத்துக் கொள்ள வேண்டும். அதிகம் அரைத்து விட கூடாது. அரைத்த வற்றை கலந்து வைத்திருக்கும் ரவா, மைதா கலவையில் சேர்த்து நன்கு கலந்துக் கொள்ள வேண்டும்.  அதன் பின்னர் இந்த கலவையில் வாழைப்பழம், சீனி, ஒரு சிட்டிகை உப்பு மற்றும் சோடா உப்பு சேர்த்து முக்கால் கப் தண்ணீர் ஊற்றி தோசை மாவு பதத்தில் கலந்துக் கொள்ளவும்.பூவம் பழம், ரஸ்தாளி, அல்லது கற்பூரவள்ளி எந்த வகை வாழைப்பழம் வேண்டு மானாலும் சேர்த்து செய்யலாம். கலந்து வைத்த மாவை 10 நிமிடங்கள் ஊற வைக்கவும். இப்பொழுது ஊறினால் நன்றாக இருக்கும்.பின் வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் ஊற வைத்த மாவை ஒரு கரண்டியில் எடுத்து எண்ணெயில் ஊற்றவும். இதைப் போல் 5 அல்லது 6 ஊற்றவும். திருப்பி விட்டு 5 நிமிடம் கழித்து எடுத்து விடவும். ரவை சேர்ப்பதால் நன்கு மேலே மொறு மொறுவென்று இருக்கும். அதிகம் எண்ணெய் இழுக்காது.

The post மைதா ரவை பணியாரம் appeared first on Dinakaran.