கம்பு வெஜிடேபிள் கஞ்சி

தேவையான பொருட்கள்:

வேக வைப்பதற்கு

கம்பு – 1 கப்
தண்ணீர் – 3 கப்
உப்பு – சுவைக்கேற்ப

கஞ்சிக்கு

எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்
கடுகு – 1/2 டீஸ்பூன்
கேரட் – 1 (பொடியாக நறுக்கியது)
பீன்ஸ் – 10 ()
ஸ்வீட் கார்ன் – 1 கைப்பிடி (பொடியாக நறுக்கியது)
இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1 டீஸ்பூன்
பச்சை மிளகாய் – 3 (கீறியது)
தண்ணீர் – 1 1/2 கப்
உப்பு – சுவைக்கேற்ப
கொத்தமல்லி – சிறிது

செய்முறை

முதலில் கம்பை நீரில் 2 முறை கழுவிக் கொள்ள வேண்டும்.பின் மிக்சர் ஜாரில் கழுவிய கம்பை சேர்த்து சற்று கொரகொரவென்று அரைத்துக் கொள்ள வேண்டும்.பின்பு குக்கரில் பொடித்த கம்பை சேர்த்து, அத்துடன் 3 கப் நீரை ஊற்றி, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து, குக்கரை மூடி, மிதமான தீயில் வைத்து, 2 விசில் விட்டு இறக்கி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.அடுத்து ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு சேர்த்து தாளிக்க வேண்டும்.பின் அதில் பொடியாக நறுக்கிய கேரட், பீன்ஸ் மற்றும் ஸ்வீட் கார்ன்னை சேர்த்து 2 நிமிடம் வதக்க வேண்டும்.பிறகு இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பச்சை வாசனை போக வதக்க வேண்டும்.பின் பச்சை மிளகாய் சேர்த்து சிறிது நேரம் வதக்க வேண்டும்.பின்பு அதில் 1 1/2 கப் நீரை ஊற்றி, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து 5 நிமிடம் நன்கு கொதிக்க வைக்க வேண்டும்.5 நிமிடம் நன்கு கொதித்ததும், குக்கரைத் திறந்து, வேக வைத்துள்ள கம்புடன் கொதித்துக் கொண்டிருக்கும் இந்த வெஜிடேபிள் நீரை அப்படியே ஊற்றி கலந்து கொள்ள வேண்டும்.பின் மீண்டும் அந்த குக்கரை அடுப்பில் வைத்து, 5 நிமிடம் நன்கு கொதிக்க வைத்து, கொத்தமல்லியைத் தூவி இறக்கினால், சுவையான கம்பு வெஜிடேபிள் கஞ்சி தயார்.

The post கம்பு வெஜிடேபிள் கஞ்சி appeared first on Dinakaran.