சென்னை: மாற்றுத்திறனாளிகள் உரிமை சட்டம் உள்ளிட்ட ஐந்து பிரிவுகளின் கீழ் மூடநம்பிக்கை பேச்சாளர் மகா விஷ்ணு மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவில் இருந்து திரும்பிய மகாவிஷ்ணுவை சென்னை விமான நிலையத்தில் நேற்றுபோலீசார் கைது செய்தனர். சைதாப்பேட்டை காவல் நிலையத்தில் மாற்றுத்திறனாளி விஜயராஜ் என்பவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் மாற்றுத் திறனாளிகள் உரிமை சட்டம் உள்ளிட்ட ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளியான இவர் யூடியூபில் இந்த வீடியோவை பார்த்து மன உளைச்சல் ஏற்பட்ட காரணத்தினால் இந்த புகார் அளித்துள்ளதாக முதல் தகவல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனடிப்படையில் பிஎன்எஸ் 4 பிரிவுகளில் குறிப்பாக 192 கலவரத்தை தூண்டும் வகையில் பேசுதல், 196 (1) (a) சமூகத்தினுடைய வெறுப்பான தகவல்கள் தகவல்களை பரப்புவது, 352 பொது அமைதியை குழைக்கும் வகையில் பேசுவது, 353 (2) மதம் இனம் குறித்து தவறான தகவல்களை பரப்புவது, மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள் சட்டங்களின் கீழாக 92 (a) பிரிவின் படி மாற்றுத்திறனாளிகளுக்கு எதிரான குற்றங்களுக்கான தண்டனை இந்த ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
The post மகாவிஷ்ணு மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு appeared first on Dinakaran.