கோவை: மகா சிவராத்திரி மற்றும் சர்வ அமாவாசையை முன்னிட்டு “தென்கயிலை” என அழைக்கப்படும் வெள்ளியங்கிரி மலையில் சிவ பக்தர்கள் வழிபாடு செய்தனர். அதிகாலை சூரிய உதயத்துக்கு முன் மலை உச்சியில் உள்ள சுயம்பு லிங்கத்துக்கு நடைபெற்ற பூஜையில் மேளதாளம், சங்கு முழங்க சிவ பக்தர்கள் பக்தி பரவசத்துடன் பங்கேற்றனர்.