மதுரை மாவட்டம் மேலூர் நாகப்பன் சிவல்பட்டியில் களைகட்டிய திருவிழா: மீன்களை பிடிக்க அதிகாலையிலேயே குவிந்த மக்கள்

மதுரை: மதுரை மாவட்டம் மேலூர் அருகே நடைபெற்ற பாரம்பரிய மிக்க மீன்பிடி திருவிழாவில் நாட்டு வகை மீன்களை மக்கள் அள்ளி சென்றனர். மேலூர் அருகே நாகப்பன் சிவல்பட்டியில் 2 ஆண்டுகளுக்கு பிறகு களைகட்டிய மீன்பிடி திருவிழா பாரம்பரியமிக்க மீன்பிடி திருவிழா நடைபெற்றது. இதில் கச்சா, ஊத்தா, கூடை, வலை உள்ளிட்ட மீன்பிடி உபகரணங்களை கொண்டு மக்கள் மீன்பிடித்தனர். 7 முதல் 10 கிலோ எடை கொண்ட மீன்கள் கிடைத்ததால் கிராம மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த கிராம மக்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் அதிகாலை 3 மணிக்கே கண்மாய் கரையில் குவிந்தனர். பின்னர் கிராம பெரியவர்கள் அனுமதி அளித்தவுடன் ஒருசேர கண்மாய்க்குள் இறங்கி ஆர்வமுடன் மீன் பிடித்தனர். மீன்பிடி திருவிழாவில் ஒவ்வொரு நபருக்கும் 7 முதல் 10 கிலோ எடை கொண்ட மீன்கள் சில நிமிடங்களிலேயே கிடைத்தன. இதில் கட்லா, ரோகு, கெளுத்தி, ஜிலேபி மற்றும் அயிரை உள்ளிட்ட நாட்டுவகை மீன்களை பிடித்த பொதுமக்கள் மகிழ்ச்சியுடன் வீடு திரும்பின.

The post மதுரை மாவட்டம் மேலூர் நாகப்பன் சிவல்பட்டியில் களைகட்டிய திருவிழா: மீன்களை பிடிக்க அதிகாலையிலேயே குவிந்த மக்கள் appeared first on Dinakaran.

Related Stories: