மதிமுக சார்பில் 17ம் தேதி நீட் எதிர்ப்பு கருத்தரங்கம்

சென்னை: நீட் நுழைவுத் தேர்வு முறையை ஒழிக்க வேண்டும், என்பதை வலியுறுத்தி வரும் 17ம் தேதி (சனிக்கிழமை) மாலை 3 மணிக்கு சென்னையில் உள்ள மதிமுக தலைமை அலுவலகமான தாயகத்தில் மாநில மாணவர் அணிச் செயலாளர் பால.சசிகுமார் தலைமையில் நீட் எதிர்ப்பு கருத்தரங்கம் நடைபெறவுள்ளது.

மதிமுக பொருளாளர் மு.செந்திலதிபன், திமுக எம்.எல்.ஏ. சி.வி.எம்.பி.எழிலரசன், விடுதலை சிறுத்தைகள் கட்சி எம்.எல்.ஏ. ஆளூர் ஷா நவாஸ், திராவிடர் கழக துணைப் பொதுச்செயலாளர் மதிவதனி ஆகியோர் கருத்தரங்கில் உரையாற்றுகிறார்கள். நீட் நீக்கப்பட வேண்டும், ஏன்? என்ற தலைப்பில் மதிமுக மாணவர் அணி நடத்தும் கட்டுரைப் போட்டியில் பங்கேற்ற மாணவர்களுக்கு இந்நிகழ்வில் பரிசும், பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்பட உள்ளது என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

The post மதிமுக சார்பில் 17ம் தேதி நீட் எதிர்ப்பு கருத்தரங்கம் appeared first on Dinakaran.

Related Stories: