×

மக்களவை தேர்தல் தொகுதி பங்கீடு தமிழக காங்கிரஸ் நிர்வாகிகளுடன் கார்கே 2 நாள் ஆலோசனை

புதுடெல்லி: வரும் 2024ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுக்கு அகில இந்திய காங்கிரஸ் கட்சி சார்பாக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வரப்படுகிறது. குறிப்பாக அக்கட்சியின் காரிய கமிட்டி கூட்டம் கடந்த சில தினங்களுக்கு முன்னதாக நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து பல்வேறு மாநிலங்களில் தொகுதி பங்கிட்டு பிரச்சனைகளுக்கு தீர்வு காண ஆலோசனை கூட்டம் தொடர்ந்து மாநில வாரியாக நடத்தப்படுகிறது. நேற்று ஆந்திரா மாநில காங்கிரஸ் பொறுப்பாளர்களுடன் கட்சித் தலைமை டெல்லியில் ஆலோசனை நடத்தியது.

இதுபோன்ற சூழலில் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தரப்பில் இருந்து நாளை மற்றும் நாளை மறுநாள் தமிழக காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகளின் ஆலோசனை நடத்த திட்டமிட்டு அதற்கான அழைப்பு விடுத்துள்ளது. இதற்காக தமிழ்நாடு மாநில காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, செல்வப்பெருந்தகை, மாணிக்கம் தாக்கூர், ப.சிதம்பரம் மற்றும் செல்வகுமார் ஆகியோர் மேற்கண்ட இரு தினங்களில் டெல்லியில் நடக்கவிருக்கும் ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்கின்றனர். மேலும் இதற்காக பொறுப்பாளாராக நியமனம் செய்யபட்ட ஆஜய்குமாரும் இந்த கூட்டத்தில் பங்கேற்பார். இந்த கூட்டத்திற்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, முன்னாள் தலைவர் ராகுல்காந்தி தலைமையில் நடக்கிறது. இதில், மக்களவை தேர்தலில் தமிழ்நாட்டில் திமுகவுடன்தொகுதி பங்கீடு செய்வது குறித்து ஆலோசனை நடத்தப்பட உள்ளது.

The post மக்களவை தேர்தல் தொகுதி பங்கீடு தமிழக காங்கிரஸ் நிர்வாகிகளுடன் கார்கே 2 நாள் ஆலோசனை appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu Congress ,Lok Sabha ,New Delhi ,All India Congress Party ,Karke ,Dinakaran ,
× RELATED உண்மையான சமத்துவம், நீதியை நிலைநாட்ட...