மக்களவை தேர்தல் பணிகள் : கமல் இன்று ஆலோசனை

சென்னை : 2024ம் ஆண்டு மக்களவைத் தேர்தல் பணிகள் தொடர்பாக கோவையில் இன்று மண்டல நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்துகிறார் கமல் ஹாசன். கோவை மண்டல நிர்வாகிகள் கூட்டத்தில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் ஹாசன் உரையாற்றவுள்ளார். கோவையில், இன்று காலை 11 மணியளவில் கோவை, ஜென்னிஸ் ரெசிடென்சியில் (டைமண்ட் ஹால்) நடைபெறவுள்ள நிகழ்வில் மாநில, மண்டல, மாவட்ட, ஒன்றிய, நகர, வட்ட, கிளை நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொள்கின்றனர்.

The post மக்களவை தேர்தல் பணிகள் : கமல் இன்று ஆலோசனை appeared first on Dinakaran.

Related Stories: