×

உள்ளாட்சி அமைப்பு ஆள்சேர்ப்பில் முறைகேடு மே.வங்க அமைச்சர், எம்எல்ஏ வீடுகளில் அமலாக்கத்துறை சோதனை: கூடுதல் பாதுகாப்புடன் சென்ற அதிகாரிகள்

கொல்கத்தா: மேற்குவங்க உள்ளாட்சி அமைப்பு ஆள்சேர்ப்பு முறைகேடு தொடர்பாக அமைச்சர், பேரவை உறுப்பினர் உள்ளிட்ட வீடு, அலுவலகங்களில் அமலாக்கத்துறை நேற்று அதிரடி சோதனை நடத்தியது. மேற்குவங்கத்தில் கடந்த 2014-18 காலகட்டத்தில் உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக இருந்த பணியிடங்களுக்கு 1,500 பேரை சட்டவிரோதமாக பணியமர்த்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக கடந்த அக்டோபர் மாதம் உணவுத் துறை அமைச்சர் ரத்தன் கோஷ், நகர்ப்புற மேம்பாட்டுத்துறை அமைச்சர் பிர்ஹாத் ஹக்கீம் ஆகியோர் வீடு, அலுவலகங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி, முக்கிய ஆவணங்களை கைப்பற்றியது.

இந்நிலையில் இந்த முறைகேடு தொடர்பாக தீயணைப்பு மற்றும் அவசர சேவைகள் துறை அமைச்சர் சுஜித் போஸ், பேரவை உறுப்பினர் தபஸ் ராய், நகராட்சி முன்னாள் தலைவர் சுபோத் சக்ரவர்த்தி ஆகியோரின் வீடுகள், அலுவலகங்கள் உள்பட 16க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறையினர் நேற்று சோதனை நடத்தினர். அண்மையில் மேற்குவங்கத்தில் ஊழல் தொடர்பாக விசாரணை நடத்த சென்ற அமலாக்கத்துறை அதிகாரிகள் கடுமையாக தாக்கப்பட்டனர். இதையடுத்து நேற்று சோதனைக்கு சென்ற அதிகாரிகள் தலைகவசம், தானியங்கி துப்பாக்கிகள் உள்ளிட்ட கூடுதல் பாதுகாப்பு உபகரணங்களுடன் சோதனை நடத்தினர்.

The post உள்ளாட்சி அமைப்பு ஆள்சேர்ப்பில் முறைகேடு மே.வங்க அமைச்சர், எம்எல்ஏ வீடுகளில் அமலாக்கத்துறை சோதனை: கூடுதல் பாதுகாப்புடன் சென்ற அதிகாரிகள் appeared first on Dinakaran.

Tags : Enforcement ,Bengal ,Minister ,MLA ,Kolkata ,West Bengal ,
× RELATED அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில்...