நெல்லை : நெல்லை மாநகர செயலாளர் சுப்பிரமணியன் ஏற்பாட்டில் சட்டத்துறை செயலாளர் என்.ஆர்.இளங்கோ எம்பி முன்னிலையில் 200 வழக்கறிஞர்கள் திமுகவில் உறுப்பினர்களாக இணைந்தனர்.கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு திமுக சட்டத்துறை சார்பில் நெல்லை மண்டல வழக்கறிஞர்களுக்கான பேச்சு போட்டி பாளையில் நேற்று நடந்தது. மாநில சட்டத்துறை செயலாளர் என்.ஆர்.இளங்கோ எம்பி தலைமை வகித்தார்.
மாநில சட்டத்துறை இணைச்செயலாளர்கள் ரவிச்சந்திரன், பச்சையப்பன், நெல்லை மத்திய மாவட்ட பொறுப்பாளர் டிபிஎம்.மைதீன்கான், மாநகர் மாவட்ட செயலாளர் சுப்பிரமணியன், மாநில வர்த்தக அணி இணைச்செயலாளர் மாலைராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர். கலைஞர் கருணாநிதியின் பார்வையில் மாநில சுயாட்சி, சமூகநீதி என்ற தலைப்பில் நடந்த பேச்சுப்போட்டியை மாநில சட்டத்துறை செயலாளர் என்.ஆர்.இளங்கோ எம்பி, துவக்கி வைத்தார். போட்டியில் இளம் வழக்கறிஞர்கள், சட்டக்கல்லூரி மாணவர்கள் பங்கேற்றனர். நடுவர்களாக சூரியா வெற்றிக்கொண்டான், நன்மாறன் ஆகியோர் செயல்பட்டனர்.
நிகழ்ச்சியில் கிழக்கு மாவட்ட மாநில தலைமை செயற்குழு உறுப்பினர் பிரபாகரன், நெல்லை கிழக்கு வழக்கறிஞர் அணி அமைப்பாளர் செல்வசூடாமணி, காமினிதேவன், தலைவர் சாமுவேல் பாஸ்கர்ராஜ், ராஜா முகம்மது, கிழக்கு மாவட்ட துணைத்தலைவர் வசந்தகுமார், துணை அமைப்பாளர்கள் வழக்கறிஞர் அணி தவசிராஜன், செல்வகுமார், ஜோயல்ஹென்றி, ராஜேந்திரன், மாடசாமி, இளைஞரணி அலிப்மீரான், வழக்கறிஞரணி மணிகண்டன், பகுதி செயலாளர்கள் நமச்சிவாயம் என்ற கோபி, அண்டன் செல்லத்துரை, மாநகர துணை செயலாளர் அப்துல்கயூம், மற்றும் மில்க் குமார், வேங்கை வெங்கடேஷ், முருகன், பேரங்காடி அய்யப்பன், வக்கீல்கள் மணிகண்டன், நயினாமுகம்மது, வட்ட செயலாளர்கள் தொப்பி காஜா, கேபிள் குமரேசன், மாரிமுத்து உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர்.
தொடர்ந்து மாநில சட்டத்துறை செயலாளர் என்.ஆர்.இளங்கோ எம்பி, நெல்லை மத்திய மாவட்ட பொறுப்பாளர் டிபிஎம்.மைதீன்கான், மாநகர செயலாளர் சுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலையில் நெல்லை மாநகர வழக்கறிஞரணி சார்பில் 200 வழக்கறிஞர்கள், திமுகவில் இணைந்தனர். இதற்கான ஏற்பாடுகளை நெல்லை மாநகர செயலாளர் சுப்பிரமணியன், வக்கீல்கள் சுரேஷ்குமார், ஜாகீர் உசேன் ஆகியோர் செய்திருந்தார்.
The post சட்டத்துறை செயலாளர் என்.ஆர்.இளங்கோ எம்பி முன்னிலையில் 200 வழக்கறிஞர்கள் திமுகவில் உறுப்பினர்களாக இணைந்தனர் appeared first on Dinakaran.