கிருஷ்ணகிரி, காஞ்சிபுரம் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழை பெய்ய வாய்ப்பு: வானிலை மையம் தகவல்

சென்னை: கிருஷ்ணகிரி, காஞ்சிபுரம் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழை பெய்ய வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

வங்கக் கடலில் கிழக்கு திசை காற் றும் மேற்கு திசை காற்றும் இணையும் நிகழ்வு நீடித்து வருவதால் நாளையும், நாளை மறுநாளும் தமிழ் நாட்டில் மழை நீடிக்கும் என வானிலை மையம் தெரிந்துள்ளது.
கேரளாவில் தென்மேற்கு பருவ மழை பெய்து வரும் நிலையில் தமிழ்நாட்டிலும் சில இடங்களில் மழை பெய்து வருகிறது.

இதற்கிடையே வங்கக் கடலில் தென்கிழக்கு கடல் பகுதியில் உருவாகியுள்ள வளிமண்டல மேல் அடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாகவும் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்து வருகிறது. இதனால் தமிழ்நாட்டில் தற்போது வெயிலின் தாக்கம் சற்று குறைந்து குளுமையான சூழல் நிலவியுள்ளது.

தமிழ்நாட்டில் நேற்று 13 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்தது. குறிப்பாக நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் கனமழை பெய்யத் தொடங்கி நேற்றும் நீடித்தது. இதன் காரணமாக சென்னை, மற்றும் புறநகர், சென்னையை ஒட்டிய மாவட்டங்களில் மழை நீர் தேங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

தென்மேற்கு பருவமழை கேரளாவில் பெய்து வரும் இந்த பருவகாலத்தில் தமிழ்நாட்டில் அதிகளவில் மழை பெய்வது அரிதான ஒன்று என வானிலை மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் தமிழ்நாட்டில் கிருஷ்ணகிரி, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், மயிலாடுதுறை, தஞ்சை, திருவாரூர், நாகை ஆகிய 10 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.

The post கிருஷ்ணகிரி, காஞ்சிபுரம் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழை பெய்ய வாய்ப்பு: வானிலை மையம் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: