அறந்தாங்கி :அறந்தாங்கி அடுத்த கோட்டைப்பட்டினத்தில் உள்ள தனியார் நண்டு கம்பெனியில் உள்ள கடல் உயிரினங்கள் கழிவுகளை பொதுமக்கள் பயன்படுத்தும் குளத்தில் கொட்டுவதால் தொற்றுநோய் ஏற்படும் அபாயம் என கோரி பொதுமக்கள் சாலை மறியல் தனியார் நண்டுகம்பெனியை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் ஊராட்சியில் தனியாருக்கு சொந்தமான கம்பெனி உள்ளது.
இந்த கம்பெனியில் நண்டு, இறால், கணவாய் உள்ளிட்ட உயிரினங்கள் ஏற்றுமதி செய்யப்படுகிறது.இந்நிலையில் இந்த தனியார் கம்பெனியில் நண்டு உள்ளிட்ட ஓடுகளை அவியல் செய்ய கெமிக்கல் பயன்படுத்தப்படுகிறது.இந்த கெமிக்கலை பயன்படுத்தி நண்டு ஓடுகளை அவியல் செய்யும்போது அந்த பகுதி பொதுமக்களுக்கு மூச்சு திணறல், கண் எரிச்சல் ஏற்படுகிறது என கூறிஅப்பகுதி பொதுமக்கள் கடந்த 2020-ம் ஆண்டு மதுரை உச்சநீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளனர்.இந்நிலையில் நேற்று முன்தினம் கோட்டைப்பட்டினம் அருகே உள்ள ஏனாதி என்ற கிராமத்தில் கிழக்கு கடற்ரை சாலை ஒரத்தில் பொதுமக்கள் பயன்படுத்தும் குளத்தில் நண்டு, இறால், கணவாய் ஓடுகளை தனியார் கம்பெனியினர் கழிவுகளையும் போட்டு உள்ளனர்.
பொதுமக்கள் பயன்படுத்தும் குளத்தில் தனியார் கம்பெனி கடல் உயிரினங்களின் கழிவுகளை போட்டுவிட்டு சென்றதால் ஆத்திரம் அடைந்த அப்பகுதி பொதுமக்கள் நேற்றுமுன்தினம் இரவு கிழக்குகடற்கரை சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த கோட்டைப்பட்டினம் போலீஸ் துணை சூப்பிரண்டு கவுதம், வருவாய்துறை அலுவலர் பிரவீன் ஆகியோர் சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்தை நடத்தி இதுகுறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தை அடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.
இதையடுத்து நேற்று மணமேல்குடி வட்டாட்சியர் சேக், மாசுகட்டுபாடு துறை, உணவு பாதுகாப்பு துறை அலுவலர்கள் கோட்டைப்பட்டினத்தில் உள்ள தனியார் நண்டு கம்பெனிக்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர்.
ஆய்வின் போது கம்பெனி முறையாக இயங்குகிறதா நண்டு ஒடு அவியல் செய்யும் போது கலக்கப்படும் கெமிக்கல் என்ன அந்த கெமிக்கல் கலப்பதால் பொதுமக்களுக்கு தீங்கு ஏதும் ஏற்படுமா என மாசுகட்டுபாடு துறை ஆய்வு செய்து அறிக்கை சம்பிக்கும் வரையில் கம்பெனி செயல் படவேண்டாம் என தெரிவித்தனர்.குளத்தில் போடப்பட்ட கம்பெனி கழிவுகளை பொக்லைன் இயந்திரம் மூலம் அப்புறபடுத்தி இனிமேல் பொதுமக்கள் இருக்கும் பகுதியில் கழிவுகளை போடவேண்டாம் என அறிவுறுத்தினர்.இச்சம்பவத்தால் கோட்டைப்பட்டினம் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
The post கோட்டைப்பட்டினம் தனியார் நண்டு கம்பெனி கழிவுகளை குளத்தில் கொட்டுவதால் தொற்று அபாயம் appeared first on Dinakaran.