வேலை முடிந்து தனது கணவர் தான் வந்துள்ளார் என்று, அந்த பெண் கதவை திறந்துள்ளார். அப்போது பார்த்திபன் அதிரடியாக பெண்ணின் வாயை பொத்தி, உள்ளே தூக்கிச் சென்று பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார். இதை சற்றும் எதிர்பார்க்காத பெண், பார்த்திபன் கையை கடித்தவிட்டு, வெளியே ஓடிவந்து உதவி கேட்டு அலறினார். இதனால் அதிர்ச்சியடைந்த பார்த்திபன் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.
இதுபற்றி அந்த பெண் கணவருக்கு தகவல் தெரிவித்தார். விரைந்து வந்த அவர் கோடம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் விசாரணை நடத்தி, அதே பகுதியில் பதுங்கி இருந்த பார்த்திபனை மடக்கி பிடித்தனர். அப்போது, அவர் தப்பியோட முயன்றதால் அவரது இடது கை உடைந்தது. அவருக்கு மருத்துவ சிகிச்சை அளித்தனர். பின்னர், அவர் மீது பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.
The post கோடம்பாக்கம் டிரஸ்ட்புரத்தில் தனியாக இருந்த பெண்ணை பலாத்காரம் செய்ய முயற்சி: டிரைவர் கைது appeared first on Dinakaran.