இந்நிலையில் நேற்று முன்தினம் கோழிக்கோடு கலெக்டர் ஸ்னேகில்குமார் சிங்குக்கு கடிதம் ஒன்று வந்தது. மாவோயிஸ்ட்டுகளின் பெயரில் எழுதப்பட்டிருந்த அந்த கடிதத்தில், கொச்சியைப் போல் விரைவில் கோழிக்கோட்டிலும் குண்டு வெடிக்கும் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. போலி கம்யூனிஸ்ட்டுகள் எங்களைத் துன்புறுத்தினால் நாங்கள் அதற்கு தக்க பதிலடி கொடுப்போம். பினராயி போலீசுக்கு தகுந்த பாடம் புகட்டுவோம் என்றும் அந்த மிரட்டல் கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது. இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post கொச்சியை போல் கோழிக்கோட்டிலும் குண்டு வெடிக்கும்: கலெக்டருக்கு மாவோயிஸ்டுகள் பெயரில் மிரட்டல் appeared first on Dinakaran.