×

சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்ட காங்கிரஸ் எம்பி திடீர் மரணம்

மும்பை: சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பெற்று வந்த காங்கிரஸ் எம்பி வசந்த்ராவ் சவான், இன்று திடீரென காலமானார். மகாராஷ்டிரா மாநில மூத்த காங்கிரஸ் தலைவரும், நாந்தேட் தொகுதி எம்பியுமான வசந்த்ராவ் சவான் (70), கடந்த சில நாட்களாக சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்ட நிலையில், தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் உள்ள கிம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். நேற்று மாலை முதல் அவரது உடல்நிலை திடீரென மோசமடைந்தது.

இந்நிலையில் இன்று அதிகாலை 4 மணியளவில் சிகிச்சை பலனின்றி வசந்த்ராவ் சவான் காலமானார். மகாராஷ்டிரா – தெலங்கானா மாநில எல்லையில் நாந்தேட் தொகுதி அமைந்துள்ளதால், இரு மாநில மக்களும் வசந்த்ராவ் சவான் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இவரது மறைவுக்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, எதிர்கட்சி தலைவர் ராகுல்காந்தி, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

The post சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்ட காங்கிரஸ் எம்பி திடீர் மரணம் appeared first on Dinakaran.

Tags : Congress ,Mumbai ,Vasantrao Chavan ,Nanded ,Maharashtra ,
× RELATED மராட்டியத்தில் காங்கிரஸ் எம்.பி. வசந்த்ராவ் சவான் காலமானார்!!