காவாசாக்கி இந்தியா நிறுவனம், 400 சிசி இன்ஜின் பிரிவில் சூப்பர் ஸ்போர்ட்ஸ் பைக்காக, நிஞ்சா இசட்எக்ஸ் – 4 ஆர் என்ற மோட்டார் சைக்கிளை அறிமுகம் செய்துள்ளது. இந்த பைக்கில், 399 சிசி லிக்விட் கூல்டு, இன்லைன் 4 சிலிண்டர் இன்ஜின் இடம் பெற்றுள்ளது. இது அதிகபட்சமாக 75 எச்பி பவரையும் 39 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும். இதில், முன்புறம் தலைகீழ் வடிவில் அமைக்கப்பட்டுள்ள டெலஸ்கோப்பிக் சஸ்பென்ஷன், பின்புறம் மோனா ஷாக் அப்சர்வர், டிஸ்க் பிரேக், காவாசாக்கி டிராக்ஷன் கன்ட்ரோலுடன் கூடிய டூயல் சேனல் ஏபிஎஸ், 4.3 அங்குல டிஎப்டி டிஸ்பிளே, ஸ்போர்ட், ரெயின், ரோடு என மூன்று டிரைவிங் மோட்கள், புளூடூத் இணைப்பு வசதி ஆகியவை உள்ளன.
மொபைல் போனை புளூடூத் மூலம் இணைத்தால், அழைப்புகள், எஸ்எம்எஸ் போன்றவற்றை பைக்கில் உள்ள டிஸ்பிளேயில் பார்த்துக் கொள்ளலாம். ஷோரூம் விலையாக சுமார் ரூ.8.5 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது, இசட் 900 என்ற 955 சிசி திறன் கொண்ட மோட்டார் சைக்கிள் விலையை விட ரூ.71,000 மட்டுமே குறைவு. இதுபோல் வெர்சிஸ் 650 ஏடிவி மோட்டார் சைக்கிளை விட அதிகம். இவை இரண்டுமே காவாசாக்கியின் அதிக திறன் கொண்ட பைக்குகளாகும். இவற்றுடன் ஒப்பிடும்போது புதிய நிஞ்சா இசட் எக்ஸ் – 4 விலை மிக அதிகம் என்றுதான் கூற வேண்டும்.
The post காவாசாக்கி நிஞ்சா இசட்எக்ஸ்-4ஆர் appeared first on Dinakaran.