×

தமிழன் தொலைக்காட்சி நிறுவன ஒளிப்பதிவாளர் மறைவிற்கு அமைச்சர் சாமிநாதன் இரங்கல்

சென்னை : தமிழன் தொலைக்காட்சி நிறுவனத்தின் ஒளிப்பதிவாளர் விக்னேஷ்வரன் அவர்களின் மறைவிற்கு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில்,”தமிழன் தொலைக்காட்சி நிறுவனத்தில் திருச்சி மாவட்டத்தில் ஒளிப்பதிவாளராகப் (Cameraman) பணியாற்றி வந்த திரு.டி.விக்னேஷ்வரன் அவர்கள், உடல்நலக் குறைவு காரணமாக இன்று (30.10.2024) உயிரிழந்தார் என்ற துயரமான செய்தியினைக் கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன்.

ஊடகத் துறையில் கடந்த 8 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றிய திரு.விக்னேஷ்வரன் அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், தமிழன் தொலைகாட்சி நிறுவனத்திற்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.மேலும், தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அறிவுரையின்படி, மறைந்த ஒளிப்பதிவாளர் திரு.விக்னேஷ்வரன் குடும்பத்திற்கு பத்திரிகையாளர் நல வாரியத்தின் மூலம் உரிய நிவாரணத் தொகை வழங்கப்படும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்,” இவ்வாறு தெரிவித்துள்ளார்.

The post தமிழன் தொலைக்காட்சி நிறுவன ஒளிப்பதிவாளர் மறைவிற்கு அமைச்சர் சாமிநாதன் இரங்கல் appeared first on Dinakaran.

Tags : Minister ,Saminathan ,Tamil Television Company Filmmaker ,Chennai ,Tamil ,Tamil Television ,Vikneshwaran ,Trishi district ,Tamil Television Company ,Saminathan Irangal ,
× RELATED முதலமைச்சர் மு.க ஸ்டாலின் ஆட்சியில்...