மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்த நாள் அன்று சத்துணவில் இனிப்பு பொங்கல் வழங்க அரசாணை வெளியிட்டது தமிழ்நாடு அரசு

சென்னை: சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞரின் பிறந்த நாள் அன்று சத்துணவில் இனிப்பு பொங்கல் வழங்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அங்கன்வாடி, சத்துணவு மையங்களில் 2 முதல் 6 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு இனிப்பு பொங்கல் வழங்க ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஏப்ரல் 14-ஆம் தேதி சட்டப்பேரவையில், சத்துணவுத் திட்டத்தில் பயனடைந்து வரும் குழந்தைகளுக்கு, பெருந்தலைவர் காமராஜர், பேரறிஞர் அண்ணா, புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் மற்றும் புரட்சித் தலைவி செல்வி ஜெ.ஜெயலலிதா ஆகியோரின் பிறந்த நாளன்று இனிப்புப் பொங்கல் வழங்கப்படுவதுபோல் இனி வரும் காலங்களில் டாக்டர் கலைஞர் மு.கருணாநிதி அவர்களின் பிறந்த நாளன்றும் இனிப்பு பொங்கல் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

குழந்தைகள் மையங்களில் சத்துணவுத் திட்டத்தில் பயனடைந்து வரும் 2 முதல் 6 வயது குழந்தைகளுக்கு, பெருந்தலைவர் காமராஜர். பேரறிஞர் அண்ணா, புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் மற்றும் புரட்சித் தலைவி செல்வி ஜெ.ஜெயலலிதா ஆகியோரின் பிறந்த நாளன்று இனிப்புப் பொங்கல் வழங்கப்படுவது போல் இனி வரும் காலங்களில் டாக்டர் கலைஞர் மு.கருணாநிதி அவர்களின் பிறந்த நாளன்றும் இனிப்புப் பொங்கல் வழங்க ஆணை வழங்குமாறு அரசைக் கேட்டுக் கொண்டுள்ளார்.

சத்துணவுத் திட்டத்தின் கீழ் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி சத்துணவு மையங்களில் பயன்பெறும் பள்ளிக் குழந்தைகளுக்கு இனி வரும் காலங்களில் டாக்டர் கலைஞர் மு.கருணாநிதி அவர்களின் பிறந்த நாளன்றும் இனிப்புப் பொங்கல் வழங்க ஆணை வழங்குமாறு அரசைக் கேட்டுக் கொண்டுள்ளார்.

குழந்தைகள் மையங்கள், சத்துணவு மையங்களில் பயனடைந்து வரும் குழந்தைகளுக்கு, நாள்தோறும் சத்துணவிற்காக அனுமதிக்கப்பட்டுள்ள அரிசியின் அளவில் அரிசி பயன்படுத்தவும், இனிப்புப் பொங்கல் வழங்க தேவைப்படும் வெல்லத்தை அங்கன்வாடிப் பணியாளர்கள் , சத்துணவு அமைப்பாளர்கள் இனிப்புப் பொங்கல் வழங்கப்படும் நாளின் உணவூட்டுச் செலவினத்திற்குள் (எரிபொருள் நீங்கலாக) வாங்குவதற்கும், அனுமதி அளித்து கேட்டுக்கொண்டுள்ளனர்.

அரசு வெளியிட்டுள்ள ஆணையினை செயல்படுத்துமாறு வட்டாரங்களில் உள்ள சம்பந்தப்பட்ட பணியாளர்களுக்கு உடனடியாக தக்க அறிவுரை வழங்குமாறு பெருநகர சென்னை மாநகராட்சி, முதன்மைச் செயலாளர், ஆணையர், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள், இயக்குநர் மற்றும் குழும இயக்குநர், சமூக நல இயக்குநர் மற்றும் அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்களும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.

அதன்படி, மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்த நாள் அன்று சத்துணவில் இனிப்பு பொங்கல் வழங்க அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. அங்கன்வாடி, சத்துணவு மையங்களில் இரண்டு முதல் ஆறு வயது வரை உள்ள குழந்தைகளுக்கு இனிப்பு பொங்கல் வழங்க அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது

 

The post மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்த நாள் அன்று சத்துணவில் இனிப்பு பொங்கல் வழங்க அரசாணை வெளியிட்டது தமிழ்நாடு அரசு appeared first on Dinakaran.

Related Stories: