கல்லணையிலிருந்து டெல்டா மாவட்ட பாசனத்திற்காக திறந்து விடப்பட்ட நீரில் 3,42,696 ஏக்கர் பரப்பளவில் குறுவை சாகுபடி செய்ய திட்டம்

தஞ்சாவூர்: காவிரி டெல்டா மாவட்டங்களுக்கு பாசனத்திற்காக 12.06.2023 அன்று மேட்டூர் அணையிலிருந்து தமிழ்நாடு முதலமைச்சர் திறந்துவிடப்பட்ட தண்ணீர் வந்தடைந்ததை தொடர்ந்து கல்லணையிலிருந்து 16.06.2023 அன்று காலை 9.30 மணியளவில் காவிரி டெல்டா மாவட்டங்களுக்கு பாசனத்திற்காக காவிரி , வெண்ணாறு, கல்லணைக்கால்வாய் கொள்ளிடம் ஆறுகளில் திறந்துவிடப்படுகிறது. கல்லணையிலிருந்து தற்போது தண்ணீர் திறந்து விடப்படுவதால் கீழ்காணும் மாவட்டங்களில், அட்டவணையில் குறிப்பிட்டுள்ளவாறு குறுவை சாகுபடி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

தஞ்சாவூர்- 1,08,951; திருவாரூர்- 92,214; நாகப்பட்டினம்- 22,805; மயிலாடுதுறை-93,750; கடலூர்- 24,976 ஆகிய மாவட்டங்களில் மொத்தமாக 3,42,696 ஏக்கர் பரப்பளவில் குறுவை சாகுபடி செய்ய திட்டமிட்டுள்ளது.

நடப்பாண்டில் (2023-2024) கல்லணையிலிருந்து காவிரி டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மற்றும் புதுக்கோட்டை ஆகியவற்றில் ஆறுகள், வாய்க்கால்கள் மற்றும் வடிகால்களில் ரூ.4600.00 லட்சம் மதிப்பில் சுமார் 3147.11 கி.மீ நீளத்திற்கு சிறப்பு திட்ட நிதியின் கீழ் தூர்வாரும் பணிகள் எடுத்துக்கொள்ளப்பட்டு நிறைவு பெற்றுள்ளது

மேட்டூர் அணையின் நீர் இருப்பு மற்றும் நீர்வரத்து, எதிர்நோக்கும் மழை, மேலும் கர்நாடகாவிலிருந்து நமக்கு கிடைக்க வேண்டிய நீரின் அளவு ஆகியவற்றை கருத்தில் கொண்டு காவிரி டெல்டா பாசன பகுதிகளுக்கு தேவைக்கேற்ப பகிர்ந்தளிக்கப்படும். மேட்டூர் அணையில் நீர் இருப்பின் அடிப்படையில் முறை பாசனம் நடைமுறைப்படுத்தப்படும் என தெரிவித்துக் கொள்ளப்படுகிறது. பாசனத்திற்கு வழங்கப்படும் நீரினை சிக்கனமாகவும், தேவைக்கேற்பவும் பயன்படுத்தி அதிக மகசூல் பெற விவசாய பெருங்குடிமக்களிடம் அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறது

 

 

The post கல்லணையிலிருந்து டெல்டா மாவட்ட பாசனத்திற்காக திறந்து விடப்பட்ட நீரில் 3,42,696 ஏக்கர் பரப்பளவில் குறுவை சாகுபடி செய்ய திட்டம் appeared first on Dinakaran.

Related Stories: