கடந்த ஆண்டு நடைபெற்ற புனித அந்தோணியார் ஆலயத் திருவிழா முடிந்த கையோடு கச்சத்தீவில் இலங்கை கடற்படையினரால் புத்தர் சிலை வைக்கப்பட்ட சம்பவம் பக்தர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது. சர்ச்சையைத் தொடர்ந்து, சிலை அகற்றப்பட்டது. நடப்பாண்டுக்கான கச்சத்தீவு திருவிழா வரும் பிப்ரவரி 23 மற்றும் 24ம் தேதிகளில் நடைபெறும் என இலங்கை தரப்பில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது.
திருவிழாவிற்கான அனைத்து நடவடிக்கைகளும் இலங்கை கடற்படையால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. திருவிழாவில் பங்கேற்க இலங்கை மற்றும் இந்தியாவில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்வார்கள். இம்முறை எவ்வித பிரச்னையும் இல்லாததால் தமிழகத்தில் இருந்து கச்சத்தீவு அந்தோணியார் திருவிழாவிற்கு அதிகளவில் பக்தர்கள் செல்லும் வாய்ப்பு உள்ளது. இதனால் பக்தர்கள் கச்சத்தீவு சென்று திரும்ப கூடுதலாக படகுகள் இயக்குவதற்கு அரசு அதிகாரிகள் முன்கூட்டியே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
The post பிப். 23, 24ல் கச்சத்தீவு திருவிழா : இந்திய – இலங்கை பக்தர்கள் திரளாக பங்கேற்பார்கள் appeared first on Dinakaran.