சென்னை: கச்சத்தீவை மீட்போம் என்று பாஜ உத்தரவாதம் கொடுக்க தயாரா? என்றும் கடந்த 10 ஆண்டுகளாக பாஜ ஏன் அந்த முயற்சியை எடுக்கவில்லை? என்றும் புரட்சி பாரதம் கட்சி தலைவர் பூவை ஜெகன்மூர்த்தி எம்எல்ஏ கேள்வி எழுப்பியுள்ளார். திருவள்ளூர் நாடாளுமன்ற தனி தொகுதியில் அதிமுக கூட்டணியில் தேமுதிக சார்பில் போட்டியிடும் கு.நல்லதம்பிக்கு ஆதரவாக அதிமுக கூட்டணியில் உள்ள புரட்சி பாரதம் கட்சி தலைவர் பூவை எம்.ஜெகன்மூர்த்தி எம்எல்ஏ பிரசாரம் மேற்கொண்டு வாக்கு சேகரித்தார். அப்போது அவர் பேசியதாவது, கடந்த 10 ஆண்டுகளில் பெட்ரோல், டீசல் மற்றும் எரிவாயு சிலிண்டர் விலை பல மடங்கு உயர்ந்துள்ளது. இதற்கு காரணமான ஒன்றிய அரசை வீட்டுக்கு அனுப்ப வேண்டும். இதேபோல கச்சத்தீவை மீட்போம் என்று பாஜ தற்போது தெரிவித்து வருகிறது. ஆனால் கடந்த 10 ஆண்டுகளாக ஏன் அந்த முயற்சியை பாஜ எடுக்கவில்லை. பாஜ தேர்தல் அறிக்கையில் தெரிவித்தது போல கச்சத்தீவை மீட்போம் என உத்திரவாதம் கொடுக்க தயாராக இருக்கிறதா? சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னோட்டமாகதான் இந்த நாடாளுமன்ற தேர்தல் நடைபெறுகிறது. எனவே வாக்காளர்கள் ஒன்றிய பாஜ அரசை வீட்டுக்கு அனுப்ப முரசு சின்னத்தில் வாக்களிக்க வேண்டும். இவ்வாறு பேசினார்.
The post கடந்த 10 ஆண்டுகளாக ஏன் முயற்சி எடுக்கவில்லை கச்சத்தீவை மீட்போம் என்று பாஜ உத்தரவாதம் கொடுக்க தயாரா: பூவை ஜெகன்மூர்த்தி எம்எல்ஏ கேள்வி appeared first on Dinakaran.