×

ஜூன் 2ம்தேதி பள்ளிகள் திறப்பு கட்டிமேடு அரசு பள்ளியில் தூய்மை பணிகள் தீவிரம்

திருத்துறைப்பூண்டி : திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள கட்டிமேடு அரசு மேல்நிலைப் பள்ளியில் தூய்மை பணி நடைபெற்று வருகின்றது.கோடை விடுமுறைக்கு பின் அனைத்து பள்ளிகளும் ஜூன் 2ம் தேதி திங்கள்கிழமை திறக்கப்படுகிறது.

வரும் கல்வி ஆண்டில் பள்ளிகள் திறக்கப்படுவதற்கு முன்பு மேற்கொள்ள வேண்டிய செயல்பாடுகள் பள்ளிக்கல்வி இயக்குநர் வழிகாட்டுதல்படி, கட்டிமேடு அரசு பள்ளியில் தூய்மைப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றது.பள்ளி அறையில் உள்ள பெஞ்ச், டெஸ்க், நாற்காலி வர்ணம் பூசப்பட்டு மாணவர்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. பள்ளி கட்டிடத்தின் மேற்பரப்பில் சேர்ந்துள்ள குப்பைகள் அகற்றப்பட்டு சுத்தம் செய்யப்பட்டது.

மேலும் பள்ளியில் உள்ள அனைத்து மின்சாதனங்கள் மற்றம் மின் சுவிட்ச்சுகள் நல்ல முறையில் செயல்படுகின்றதா என்பதை தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்கள் உறுதி செய்தனர். பெற்றோர் ஆசிரியர் கழகம், பள்ளி மேலாண்மைக் குழு மற்றும் ஆசிரியர்கள் ஐந்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் ஆறாம் வகுப்பு சேரவும், 8 மற்றும் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் முறையே 9 மற்றும் 11ஆம் வகுப்பு சேர பள்ளியைச் சுற்றியுள்ள அனைத்து கிராமங்களிலும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மாணவர்கள் பயன்பாட்டிற்கான குடிநீர் தொட்டி மற்றும் மேல் நீர் தேக்க தொட்டி அனைத்திலும் உட்புறம் கிரிமி நாசினி கொண்டு நன்கு சுத்தம் செய்யப்பட்டு தூய்மையாகவும் பாதுகாப்பான குடிநீர் மாணவர்களுக்கு கிடைக்க வகையில் உறுதி செய்யப்பட்டது.பள்ளியில் நடைபெறும் பணிகளை தலைமை ஆசிரியர் மு ச பாலு, பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் அப்துல் முனாப், பள்ளி மேலாண்மை குழு தலைவி தேன்மொழி, மற்றும் ஆசிரியர்கள் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

The post ஜூன் 2ம்தேதி பள்ளிகள் திறப்பு கட்டிமேடு அரசு பள்ளியில் தூய்மை பணிகள் தீவிரம் appeared first on Dinakaran.

Tags : Kattimedu Government School ,Thiruthuraipoondi ,Kattimedu Government Higher Secondary School ,Tiruvarur ,
× RELATED சிறப்பு வகுப்புகள் நடத்த கூடாது: தனியார் பள்ளிகளுக்கு எச்சரிக்கை