×

அமலாக்கத்துறை கட்டுப்பாட்டில் இருந்து வெளியே வந்த செந்தில் பாலாஜி?.. ஜாமீன் வழக்கில் நாளை தீர்ப்பு

சென்னை: அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமின் மனு மீதான தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமின் மனு மீதான தீர்ப்பை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் ஒத்திவைத்தது. அமைச்சர் செந்தில் பாலாஜி, அமலாக்கத்துறை தரப்பு வாதங்கள் முடிந்த நிலையில் நீதிபதி தீர்ப்பை ஒத்திவைத்தார். அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமின் வழங்க அமலாக்கத்துறை எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

செந்தில் பாலாஜிக்கு இடைக்கால ஜாமின் வழங்க சட்டத்தில் இடமில்லை என்று அமலாக்கப்பிரிவு தெரிவித்துள்ளது. செந்தில் பாலாஜிக்கு தேவையான சிகிச்சைகள் அனைத்தும் வழங்கப்படும் என அமலாக்கத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமைச்சர் செந்தில் பாலாஜியை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி அமலாக்கத்துறை மனு தாக்கல் செய்துள்ளது. சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வரும் நிலையில் அமலாக்கத்துறை மனு தாக்கல் செய்துள்ளது.

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சிகிச்சை அளிப்பதற்கான மருத்துவக் குழுவை நீதிமன்றமே நியமிக்க வேண்டும் என்று அமலாக்கத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரிமாண்ட் செய்யப்பட்டு விட்டதால் ஜாமின்தான் கேட்க முடியும் என அமலாக்கத்துறை தரப்பில் வாதம் தெரிவிக்கப்பட்டது. எதற்காக கைது செய்கிறோம் என்ற காரணத்தை தெரிவித்தோம், சம்மன் அளித்தோம் அமலாக்கத்துறை வாதம் தெரிவித்துள்ளது.

கைது மெமோ அளிக்கப்பட்டபோது அதைப் பெற செந்தில் பாலாஜி மறுத்தார் என்று அமலாக்கத்துறை தரப்பு வாதம் தெரிவித்தது. கைது செய்யப்படுவோம் என்பது தெரிந்தே குறிப்பாணையை பெற செந்தில் பாலாஜி மறுத்துவிட்டார் என்று கூறப்பட்டுள்ளது. செந்தில் பாலாஜி ஜாமின் மனு மீதான தீர்ப்பை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் நாளை ஒத்திவைத்தது. அமைச்சர் செந்தில் பாலாஜி, அமலாக்கத்துறை தரப்பு முடிந்த நிலையில் நீதிபதி தீர்ப்பை நாளை ஒத்திவைத்தார்.

The post அமலாக்கத்துறை கட்டுப்பாட்டில் இருந்து வெளியே வந்த செந்தில் பாலாஜி?.. ஜாமீன் வழக்கில் நாளை தீர்ப்பு appeared first on Dinakaran.

Tags : Senthil Balaji ,Chennai ,Minister ,Jamin ,Enforcement Department ,Dinakaran ,
× RELATED முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு உடல்நலக் குறைவு!