சென்னையில் பன்னாட்டு கணித்தமிழ் மாநாடு

சென்னை: வளர்ந்து வரும் தொழில் நுட்பங்களில் தமிழின் நிலை குறித்து ஆராய்தல், விவாதித்தல், புதிய சிந்தனைகளை உருவாக்குதல், இளம் திறமைகளை அடையாளம் காணுதல் உள்ளிட்ட இலக்குகளை அடைவதற்காகப் பன்னாட்டுக் கணித்தமிழ் மாநாடு மூன்று நாட்கள் சென்னை, நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நடக்கிறது.

இந்த பன்னாட்டு கணித்தமிழ் 24 மாநாட்டை நேற்று தகவல் தொழில்நுட்பத் துறை-சேவைகள் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தொடங்கி வைத்தார்.

மொழித் தொழில்நுட்பங்கள் தொடர்பான 30க்கும் மேற்பட்ட நிறுவனங்களின் அதிநவீனத் தயாரிப்புகள், திட்டங்கள், புதிய சிந்தனைகள் போன்றவற்றைப் பிரதிபலிக்கும் விதமாக 40 காட்சி அரங்குகள் மாநாட்டில் கலந்து கொள்வோர் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன.

The post சென்னையில் பன்னாட்டு கணித்தமிழ் மாநாடு appeared first on Dinakaran.

Related Stories: