இதில் 18 வயது முதல் 40 வயது வரை உள்ளோர்க்கு ஒரு பிரிவாகவும், 40 வயதிற்கு மேற்பட்டோர்க்கு இன்னொரு பிரிவாகவும், ஆண், பெண் இருபாலருக்கும் தனித்தனியாக நடக்கிறது. இந்த மாரத்தானில் கலந்துகொள்ளும் ஆண், பெண் உள்ளிட்ட அனைத்து பங்கேற்பாளர்களுக்கும் பதக்கம், சான்றிதழ், டி-ஷர்ட் மற்றும் சிற்றுண்டி இலவசமாக வழங்கப்படும். மேலும், முதல் பரிசாக ரூ.30,000, இரண்டாம் பரிசாக ரூ.20,000, மூன்றாம் பரிசாக ரூ.10,000 வழங்கப்படும். மாரத்தானில் கலந்துகொள்ளும் அனைத்து பங்கேற்பாளர்களும் https://www.tncu.tn.gov.in/marathon/register என்ற இணையதளம் வழி நுழைவு கட்டணமாக ரூ.100 செலுத்தி பதிவு செய்து மாரத்தானில் கலந்துகொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
The post சர்வதேச கூட்டுறவு நாளை கொண்டாடும் வகையில் சென்னையில் 6ம்தேதி மாரத்தான் appeared first on Dinakaran.
