இடைக்கால பட்ஜெட்டில் பொதுமக்களுக்கு ஆதாயம் தரும் அறிவிப்புக்கள் இருக்காது: ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தகவல்

புதுடெல்லி: 2024 -25ம் ஆண்டுக்கான முழு பட்ஜெட்டை புதிதாக தேர்ந்தெடுக்கப்படும் அரசு ஜூலையில் தாக்கல் செய்யும் என்று ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் நடந்த இந்திய தொழில் கூட்டமைப்பின் உலகளாவிய பொருளாதார மாநாட்டில், ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்து கொண்டு பேசுகையில், ‘‘2024ம் ஆண்டு பிப்ரவரி ஒன்றாம் தேதி தாக்கல் செய்யப்படும் இடைக்கால பட்ஜெட்டில் புதிய அரசு பதவி ஏற்கும் வரையில் அரசு எதிர்கொள்ளும் செலவை ஈடு செய்வதற்கான நிதி ஒதுக்கீடு மட்டுமே இருக்கும்.

அந்த நேரத்தில் பொதுமக்களுக்கு ஆதாயம் தரும் எந்தவித அறிவிப்பும் இருக்காது. எனவே ஏப்ரல்-மே மாதத்தில் பொது தேர்தலுக்கு பிறகு தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய அரசானது ஜூலையில் முழு பட்ஜெட்டை தாக்கல் செய்யும் வரை நீங்கள் காத்திருக்க வேண்டும்” என்று குறிப்பிட்டார்.

The post இடைக்கால பட்ஜெட்டில் பொதுமக்களுக்கு ஆதாயம் தரும் அறிவிப்புக்கள் இருக்காது: ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: