பட்ஜெட்டில், உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்கான மூலதனச் செலவினங்களுக்காக ரூ.11.11 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. கடந்த பிப்ரவரியில் அறிவிக்கப்பட்ட இடைக்கால பட்ஜெட்டிலும், உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்கு ரூ.11.11 லட்சம் கோடியே ஒதுக்குவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3.4 சதவீதம்.
உள்கட்டமைப்புக்கான நிதி ஆதரவுக்காக, மாநிலங்களுக்கு ஊக்கமளிக்க இந்த ஆண்டு ரூ.1.5 லட்சம் கோடி வட்டியில்லா நீண்ட கால கடன் வழங்கப்படும் என்று நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். இதுதவிர, உள்கட்டமைப்பு முதலீட்டில் தனியாரையும் பங்கேற்க செய்யும் வகையில், இடைவெளி நிதி அறிமுகப்படுத்தப்படும் என்றும் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
The post உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்கு ரூ.11.11 லட்சம் கோடி ஒதுக்கீடு appeared first on Dinakaran.