×

சபரிமலை பக்தர்களுக்கு கழிப்பறை உள்பட அனைத்து வசதிகளும் செய்து தரவேண்டும்: கேரள உயர்நீதிமன்றம் உத்தரவு


திருவனந்தபுரம்: சபரிமலையில் பக்தர்களுக்கு ஏற்படுத்தப்பட்டுள்ள வசதிகள் குறித்து திருவிதாங்கூர் தேவசம் போர்டு கேரள உயர் நீதிமன்றத்தில் அறிக்கை ஒன்றை தாக்கல் செய்தது. அதை நீதிபதிகள் அனில் கே. நரேந்திரன், முரளி கிருஷ்ணா ஆகியோர் பரிசீலித்தனர். அதன் பிறகு நீதிபதிகள் கூறியது: சபரிமலைக்கு மண்டல, மகரவிளக்கு காலங்களில் பெருமளவு பக்தர்கள் வருவார்கள். அவர்களுக்கு கழிப்பறைகள் உள்பட அனைத்து வசதிகளும் செய்யப்பட்டு இருக்கிறதா? என்பதை தேவசம் போர்டு உறுதி செய்ய வேண்டும்.

நிலக்கல், பம்பை, சன்னிதானம் ஆகிய இடங்களிலும், சபரிமலை செல்லும் வழிகளிலும் பக்தர்களுக்கு அடிப்படை வசதிகளுக்கு எந்தக் குறையும் இருக்கக் கூடாது. தேவசம் போர்டு நிர்வாக அதிகாரி இதை உறுதி செய்ய வேண்டும். உதவி பொறியாளர்கள் இதை அடிக்கடி பரிசோதித்து நிர்வாகப் பொறியாளருக்கு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் கூறினர்.

The post சபரிமலை பக்தர்களுக்கு கழிப்பறை உள்பட அனைத்து வசதிகளும் செய்து தரவேண்டும்: கேரள உயர்நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Sabarimala ,Kerala High Court ,Thiruvananthapuram ,Thiruvananthapuram Board ,Anil K. Narendran ,Murali Krishna ,Dinakaran ,
× RELATED பக்தர்களின் சரண கோஷம் முழங்க சபரிமலையில் மண்டல பூஜை: நடை சாத்தப்பட்டது