×

கோடை விடுமுறை என்பது நீதிமன்ற பகுதி வேலை நாட்கள் என பெயர் மாற்றம்: உச்சநீதிமன்றம் நடவடிக்கை


புதுடெல்லி: உச்சநீதிமன்றத்துக்கு விடப்படும் கோடைக்கால விடுமுறை தொடர்பாக பல்வேறு கருத்துக்கள் கூறப்பட்டு வந்தது. உச்சநீதிமன்ற நீதிபதிகள் நீண்ட நாட்கள் விடுமுறையில் இருப்பதாகவும் பலர் விமர்சித்து இருந்தனர். இந்நிலையில் உச்சநீதிமன்றத்தின் கோடை விடுமுறையானது, நீதிமன்ற பகுதி வேலை நாட்கள் என்று மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

உச்சநீதிமன்ற விதிகள், 2013ன் திருத்தத்தின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. நீதிமன்ற பகுதி வேலைநாட்களின் எண்ணிக்கை, நீதிமன்றம் மற்றும் நீதிமன்ற அலுவலகங்களுக்கான விடுமுறை நாட்களின் எண்ணிக்கை ஆகியவை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியால் நிர்ணயம் செய்யப்பட்டு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.

The post கோடை விடுமுறை என்பது நீதிமன்ற பகுதி வேலை நாட்கள் என பெயர் மாற்றம்: உச்சநீதிமன்றம் நடவடிக்கை appeared first on Dinakaran.

Tags : Supreme Court ,New Delhi ,Dinakaran ,
× RELATED உயர் நீதிமன்ற நீதிபதிகளின்...