ஜெய்சால்மர்: பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்கு தப்பி வந்த இளம் தம்பதி ராஜஸ்தான் பாலைவனத்தில் பலியானது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பாகிஸ்தான் சிந்து மாகாணத்தில் கோட்கி மாவட்டம் மிர்பூரை சேர்ந்த இளம் தம்பதி ரவிகுமார், சாந்திபாய். இவர்கள் இருவரும் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர். நிம்மதியாக குடும்பம் நடத்த இந்தியாவுக்கு வர அவர்கள் தீர்மானித்து விசாவுக்கு விண்ணப்பித்தனர். ஆனால் இந்தியா, பாகிஸ்தான் மோதலால் அவர்களுக்கு விசா கிடைக்கவில்லை. எனவே பெற்றோர் எதிர்ப்பை மீறி எல்லை தாண்டி அவர்கள் இந்தியாவுக்குள் நுழைந்தனர். ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சால்மர் வழியாக வந்த போது பிபியன் பாலைவனத்தில் சிக்கி, அங்கு தண்ணீர், உணவு இல்லாமல் பலியானார்கள். அவர்கள் உடல்களை போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள்.
The post இந்தியாவுக்கு தப்பி வந்த போது சோகம் ராஜஸ்தான் பாலைவனத்தில் பாக். இளம் தம்பதி பலி appeared first on Dinakaran.
