விஐடி உலகளவில் உள்ள பல்கலைக்கழக தரவரிசை பட்டியலில் (சாங்காய்) 501ல் இருந்து 600க்குள் இடம் பிடித்துள்ளது. கல்வி, ஆராய்ச்சி செயல்பாடு, முன்னாள் மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் நோபல் விருது பெற்றவர்கள், தலை சிறந்த ஆராய்ச்சி கட்டுரைகளை சிறந்த இதழில் வெளியிடுதல், சிறந்த ஆராய்ச்சிகள் வெளிவருதல் போன்றவற்றை அடிப்படையாக கொண்டு சாங்காய் கல்வி தரவரிசை பட்டியல் வெளியிடப்படுகிறது. சாங்காய் கல்வி தரவரிசை பட்டியலில் உலகளவில் தலைசிறந்த 1,000 பல்கலைக்கழகங்கள் இடம் பெற்றுள்ளன.
இதில் இந்தியாவில் மட்டும் 15 பல்கலைக்கழகங்கள் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. பெங்களூருவில் உள்ள இந்திய அறிவியல் நிறுவனம் உலகளவில் 401 முதல் 500 இடங்களுக்குள் பிடித்துள்ளது. அதிலும் இந்தியளவில் முதல் இடம் பிடித்துள்ளது. மேலும் இந்திய அளவில் விஐடி 2ம் இடம் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
The post இந்தியாவில் 2வது சிறந்த பல்கலைக்கழகம் விஐடி: சாங்காய் அமைப்பு அறிவிப்பு appeared first on Dinakaran.